www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

ஞாயிறு, ஜூலை 16, 2017

தோல்வி எதிரொலி: இலங்கை அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் மேத்யூஸ்

மேத்யூஸ்இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து, ஏஞ்சலோ மேத்யூஸ் விலகியுள்ளார்.




ஜிம்பாப்வே அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதனிடையே, இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-2 என்ற வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி கைப்பற்றியது. இதனால், ஜிம்பாப்வே அணி மற்றும் அதன் ரசிகர்கள், உற்சாக மிகுதியில் உள்ளனர். ஆனால், சொந்த நாட்டிலேயே, அதுவும் தர வரிசையில் கீழ் உள்ள அணியுடன் தோல்வியடைந்ததால், இலங்கை அணி மீது விமர்சனம் எழுந்துள்ளது.



தொடரைத் தோற்ற உடனேயே, கேப்டன் பதவியிலிருந்து விலகுவதுகுறித்து பிறகு அறிவிப்பேன் என்று கூறியவர், அடுத்த நாளே அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். டெஸ்ட், ஒரு நாள், டி-20 ஆகிய மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பிலி ருந்தும் மேத்யூஸ் விலகியுள்ளார். கடந்த, 2013-ம் ஆண்டு, இலங்கை அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்றார் மேத்யூஸ். 38 டெஸ்ட், 98 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 12 டி-20 போட்டிகளில் அவர் இலங்கை அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார்