வெள்ளி, ஜூலை 14, 2017

இலத்திரனியல் சாரதி அனுமதிப்பத்திர நிபந்தனைகள்

ள்புதிய இலத்திரனியல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும்போது, உடலுறுப்புகளை தானமாக பெற்றுக்கொள்வதற்கான நிபந்தனைகளை உள்ளடக்கவுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நுரையீரல், இதயம், கல்லீரல் மற்றம் சீறுநீரகம் என்பன, அறுவை சிகிச்சைகளுக்காக மருத்துவ துறைக்கு பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்

அத்தோடு அதற்கான சகல சட்டபூர்வமான நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்து விட்டது.கண்டி பெரிய வைத்தியசாலைக்கு நேற்று கண்காணிப்பு விஜயம் மெற்கொண்டபோது அமைச்சர் இதனை தெரிவித்தார்.