வியாழன், ஜூலை 06, 2017

வடக்கு முதல்வரை சந்தித்தார் தமிழிசை

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், இந்திய பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாடுக் கிளைத் தலைவர் தமிழிசைக்கும் இடையே இன்று சந்திப்பு நடைபெற்றது.

தமிழிசை தனிப்பட்ட பயணமாக நேற்று இலங்கைக்கு வந்திருந்தார். அவர் இன்று யாழ்ப்பாணம் வந்தார்.
வடக்கு மாகாண முதலமைச்சர், அமைச்சர்களை அவர் இன்று சந்தித்தார்.
நேற்று தமிழிசையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆகியோர் சந்தித்திருந்தனர்.