திங்கள், ஜூலை 24, 2017

இலங்கையில் நம்பகமான பொறுப்புக்கூறல் அவசியம்! - கனடியப் பிரதமர்

இலங்கையில் நம்பகமான பொறுப்புக்கூறல் அவசியம் என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ இதனை வலியுறுத்தியுள்ளார். கறுப்பு ஜூலையை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர்,
1983ம் ஆண்டு ஜூலை 24 முதல் 29ம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கொழும்பிலும், இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததுடன் எண்ணற்ற பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டதுடன் இடப்பெயர்வுகளும் இடம்பெற்றன.
இலங்கையில் நம்பகமான பொறுப்புக்கூறல் அவசியம் என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ இதனை வலியுறுத்தியுள்ளார். கறுப்பு ஜூலையை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர், 1983ம் ஆண்டு ஜூலை 24 முதல் 29ம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கொழும்பிலும், இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததுடன் எண்ணற்ற பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டதுடன் இடப்பெயர்வுகளும் இடம்பெற்றன.

இன்று, கறுப்பு ஜூலையின் 34 வது ஆண்டு நிறைவை நினைவு கூர்வதற்காக, தமிழர்கள் மற்றும் தமிழ் சமூகத்தின் உறுப்பினர்களுடன் நாம் ஒன்று சேரவுள்ளோம். இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின்போது, பாதிக்கப்பட்ட அனைவரின் காயங்களையும் குணப்படுத்த நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.

அனைத்து இலங்கையர்களுக்கும் நீண்ட கால சமாதானத்தை அடைய சர்வதேச முயற்சிகளை கனடா வரவேற்றுள்ளது, ஆனால் இந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெறக் கூடிய , பொறுப்புக்கூறும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டியது அவசியம். கனடா அரசாங்கத்தின் சார்பில், இலங்கை உள்நாட்டுப் போரின் போது கடுமையாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபம் மற்றும் ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.