தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வியாழன், ஜூலை 27, 2017

மரணமான பொலிஸ் அதிகாரியின் மனைவிக்கு சப் இன்ஸ்பெக்டர் பதவி

நல்லூரில் கடந்த சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த சார்ஜன்ட் சரத் பிறேமச்சந்திர பொலிஸ்

அதிகாரியின் மனைவிக்கு சப் இன்ஸ்பெக்டர் பதவி வழங்கப்பட உள்ளது. பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இந்தப் பதவி உயர்வினை வழங்கியுள்ளார்.உயிரிழந்த சரத்சந்திரவின் மனைவி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னதாக பொலிஸ் சேவையிலிருந்து விலகிக் கொண்டிருந்தார். அவருக்கு பதவி உயர்வுடன் வீட்டுக்கு அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் பதவியொன்று வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சரத்சந்திரவிற்கு கௌரவம் அளிக்கும் நோக்கில் இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
நல்லூரில் கடந்த சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த சார்ஜன்ட் சரத் பிறேமச்சந்திர பொலிஸ் அதிகாரியின் மனைவிக்கு சப் இன்ஸ்பெக்டர் பதவி வழங்கப்பட உள்ளது. பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இந்தப் பதவி உயர்வினை வழங்கியுள்ளார்.உயிரிழந்த சரத்சந்திரவின் மனைவி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னதாக பொலிஸ் சேவையிலிருந்து விலகிக் கொண்டிருந்தார். அவருக்கு பதவி உயர்வுடன் வீட்டுக்கு அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் பதவியொன்று வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சரத்சந்திரவிற்கு கௌரவம் அளிக்கும் நோக்கில் இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.