புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

செவ்வாய், ஜூலை 11, 2017

எனக்கு விஷம் கொடுத்து கொன்று விடலாம்: சசிகலா கலக்கம்

சசிகலாவை சிறையில் தினகரனும் அவரது ஆதரவு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் சந்தித்தபோது, தினகரனுக்கு எதிராக திவாகரன் செயல்படுவது பற்றி புகார் தெரிவிக்கப்பட்டது. "சின்னம்மா.. உங்களால் துணை பொதுச் செயலாளரான தினகரன் கட்சியை கட்டுக்குள் கொண்டு வர முயல்கிறார். அதை நடராஜனும் திவாகரனும் தடுக்கிறார்கள். அம்மா செத்தபிறகும் சிக்கலில்லாமல் கட்சியும் ஆட்சியும் இருந்தநிலையில், அவர்கள் இரண்டு பேர் பேசிய பேச்சுதான் வில்லங்கமானது. நமக்கு எதிராக செயல்பட்ட ஓ.பி.எஸ்.ஸுடன் டச்சில் இருக்காங்க. ஓ.பி.எஸ். தரப்பு கிளப்பிய, ஜெ.வுக்கு விஷ ஊசிங்கிற குற்றச்சாட்டை ஐயா (நடராஜன்) பேசுகிறார்' எனப் புகார் வாசித்தனர். 

அதற்கு, "நான் ஜெயிலில் இருக்கிறேன். விடுதலையாகி வரணும்னு ஆசைப்படுகிறேன். இந்த சூழ்நிலையில் அக்காவுக்கு விஷ ஊசி போட்டோம் என்பது மாதிரி அவர் பேசுகிறார். இப்படியெல்லாம் பேசுவதை விட எனக்கு விஷம் கொடுத்து கொன்று விடலாம்' என சசிகலா கலக்கத்துடன் சொல்லியிருக்கிறார். அவரை ஆசுவாசப்படுத்திய தினகரனிடம் மறு சீராய்வு மனு குறித்து சசிகலா விவாதித்திருக்கிறார். மறு சீராய்வு மனு விசாரணைக்கு வர இன்னும் ஒரு மாதமாகும் என அவர்கள் முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

ஆகஸ்ட் மாதம் வெளியே வரலாம் என்பது சசிகலாவின் நம்பிக்கை. அதனால், ஆகஸ்ட் 5-ந்தேதி வரை பொறுமை காக்கவும் என தினகரனிடம் சொன்னதாக பெங்களூரு சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.