வியாழன், ஜூலை 13, 2017

மொன்றியல் ஆற்றில் விழுந்து காணாமல் போன தமிழ் இளைஞன் சடலமாக மீட்பு!

கனடாவில் உள்ள பிராய்ரிஸ் ஆற்றில் விழுந்து காணாமல் போன தமிழ் இளைஞனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 3 மணியளவில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் Andrée-Anne Picard தெரிவித்துள்ளார். ஞாயிற்றுகிழமை காணாமல்போன அனோஷன் நாகேஸ்வரா என்ற இளைஞனின் சடலமே இது என Montreal பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
தீயணைப்பு வீரர்கள் குறித்த உடலை இழுத்து எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் உள்ள பிராய்ரிஸ் ஆற்றில் விழுந்து காணாமல் போன தமிழ் இளைஞனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 3 மணியளவில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் Andrée-Anne Picard தெரிவித்துள்ளார். ஞாயிற்றுகிழமை காணாமல்போன அனோஷன் நாகேஸ்வரா என்ற இளைஞனின் சடலமே இது என Montreal பொலிஸார் உறுதி செய்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் குறித்த உடலை இழுத்து எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

20 வயதுடைய நாகேஸ்வரா என்ற இளைஞர் வேகமாக நீர் செல்லும் ஆற்றில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புகைப்படம் எடுக்கும் போதே அவர் ஆற்றில் தவறி விழுந்துள்ளார். எனினும் அவருக்கு நீச்சல் தெரியாதென குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் படம்பிடித்தபோது ஆற்றில் தவறி விழுந்த தமிழ் இளைஞனைக் காணவில்லை! Top News
[Wednesday 2017-07-12 19:00]

படம் பிடித்துக் கொண்டிருந்த போது, கனடாவில் உள்ள பிராய்ரிஸ் ஆற்றில் தவறி விழுந்த தமிழ் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளார். அவரைத் தேடும் பணியில் மொன்றியல் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றது. அனோசன் நாகேஸ்வரா என்ற 20 வயதுடைய இளைஞனே காணாமல் போயுள்ளார்.
படம் பிடித்துக் கொண்டிருந்த போது, கனடாவில் உள்ள பிராய்ரிஸ் ஆற்றில் தவறி விழுந்த தமிழ் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளார். அவரைத் தேடும் பணியில் மொன்றியல் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றது. அனோசன் நாகேஸ்வரா என்ற 20 வயதுடைய இளைஞனே காணாமல் போயுள்ளார்.

தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் இளைஞனை கண்டுபிடிக்க முடியவில்லை என நேற்று மாலை தெரிவித்துள்ளனர். நேற்று 4 மணித்தியாலங்கள் நிறுத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கை இன்று மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேடுதல் நடவடிக்கைகளுக்காக ஹெலிகொப்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மொன்றியலுக்கு மேற்கே Pierrefonds என்னும் இடத்தில் உள்ள ஆற்றிற்கு அருகே நின்று படம் எடுத்துக் கொண்டிருந்த போது கால் தவறி ஆற்றில் வீழ்ந்தார். எனினும் அவரை காப்பாற்ற உடன் சென்ற தோழியால் முடியவில்லை. சமீபத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நீர்மட்டம் அதிகமாக இருந்த ஆற்றில் சுழியும், நீரோட்டமும் அதிகமாக இருந்ததால் அனோசன் நீரினால் அடித்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.