www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வெள்ளி, ஜூலை 21, 2017

ஐ.நாவின் அரசியல் விவகாரச் செயலாளருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல்
விவகாரப் பொதுச்செயலாளர் ஜெஃப்ரி பெல்ட்மனுக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கொழும்பு – பௌத்தலோகா மாவத்தையிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் இன்றுகாலை 9.30 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார். “இந்த சந்திப்பு திருப்திகரமானதாக அமைந்திருந்தது. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மிகவும் மந்தகதியில் இடம்பெற்று வருவதாகவும், அதை துரிதமாக உள்ளீர்ப்பதற்கு முடியாதிருப்பதற்கான காரணங்கள், அதை எவ்விதம் கையாள வேண்டும் என்பது குறித்து சந்திப்பில் பேசியதாக கூறிய அவர், நாட்டில் நீண்ட காலமாக இருந்து வந்த சரித்திரம் தொடரக் கூடாது என்று கூறினார்.
தற்போது சர்வதேச சமூகம் விஷேடமாக ஐ.நா சபை இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு முன் வந்திருக்கிறார்கள். ஐ.நாமனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். எமது மக்கள் அரசாங்கத்திற்கு 2 வருட கால அவகாசம் கொடுப்பதை விரும்பவில்லை. எமக்கும் கூட இதில் கருத்து வேறுபாடு இருந்தது. ஆனால் இலங்கை அரசின் சம்மதத்துடன் பேரவையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் கால அவகாசம் வழங்கினோம்.
எனினும் 4 மாதங்கள் கடந்து விட்டன. ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் போதாது. அதனால் இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு சர்வதேச சமூகம் தம்மால் இயன்ற பங்களிப்பைச் செய்ய வேண்டும். காணாமல் போனோர் விடயங்கள், காணிப் பிரச்சினைகள், அரசியல் கைதிகளின் பிரச்சினைகள, பயங்கரவாத தடைச்சட்டம் போன்றவற்றில் கடந்த அரசாங்கத்திற்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் இடையில் ஒரு வித்தியாசம் இருந்த போதிலும் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் எமது மக்களுக்கு திருப்தியளிக்கவில்லை என்று ஆர். சம்பந்தன் கூறியுள்ளார்.