புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

சனி, ஜூலை 08, 2017

நாவற்குழியில் விகாரை அமைக்க நீதிமன்றம் இடைக்காலத் தடை

நாவற்குழி சிங்களக் குடியேற்றப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாதுகோபுர கட்டுமான பணிகளுக்கு, சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஸ்ரீநிதி நந்தசேகரன், இன்று இடைக்காலத் தடையுத்தர பிறப்பித்தார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி வழக்கு எடுத்து கொள்ளப்படும் வரை எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள முடியாது என, அவர் தனது உத்தரவில் தெரிவித்தார்.

நாவற்குழி பகுதியில் அனுமதி பெறாது அமைக்கப்பட்டு வரும் விகாரை தொடர்பாக பலராலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்ததுடன், அனுமதியற்ற கட்டடம் அமைக்கப்படுவது தொடர்பாகவும் சாவகச்சேரி பிரதேச சபையால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சாவகச்சேரி நீதpவான் நீதிமன்ற நீதpவான் கட்டடம் அமைப்பதற்கு தடையுத்தரவு பிறப்பித்தார்.