தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வெள்ளி, ஜூலை 14, 2017

உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி!

மகளிர் உலகக் கோப்பையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி
பெற்றுள்ளது.மகளிர் உலகக் கோப்பையில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்திய அணி முதலில் பேட் செய்தது. இந்திய அணியில் பூனம் ராவ்த், மித்தாலி ராஜ் ஆகியோரைத் தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். பூனம் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். மேலும், இன்றையப் போட்டியின் மூலம் பெண்கள் கிரிக்கெட்டில் 6,000 ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையை மித்தாலி ராஜ் படைத்தார். பூனம் 106, மித்தாலி ராஜ் 69 ரன்கள் எடுத்தார்.

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்தது. இதையடுத்து எளிமையான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலே ரன் குவிப்பில் ஈடுபட்டது. அந்த அணியின் மெக் லன்னிங் 76, பெர்ரி 60 ரன்கள் எடுத்தார். இதனால், ஆஸ்திரேலிய அணி 45.1 ஓவர்கள் முடிவிலேயே இலக்கை எட்டியது. 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியடைந்த போதும், இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு உள்ளது. இந்திய அணி அடுத்ததாக, நியூஸிலாந்து அணியுடன் விளையாடுகிறது. அந்தப் போட்டியில் வெற்று பெறும் பட்சத்தில் இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தற்போது வரை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா ஆகிய மூன்று அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.