வெள்ளி, ஜூலை 21, 2017

பல்கலை. மாணவன் விபத்தில் உயிரிழப்பு – மன்னாரில் சம்பவம்

மன்னார், நானாட்டான் பிரதான வீதியில் இன்று மாலை நடந்த விபத்தில் பல்கலைக் கழக மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குபட்ட நறுவிலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த றெக்ஸ் கமில்டன் (வயது-27) என்பவரே உயிரிந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின என்று தெரிவிக்கப்பட்டது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படு காயங்களுக்கு உள்ளான நிலையில் மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர். அவர்களில் கமில்டன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். மற்றையவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார் என்று தெரிவிக்கப்பட்டது.