www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

புதன், ஜூலை 19, 2017

ரொரன்டோ விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வயோதிபப் பெண் பலி



கனடா, ரொரன்டோவில்,  உள்ள ஸ்காபுரோவில் நேற்று காலை நடந்த   விபத்தில் 71 வயதான சிவலோகநாதன் காமாட்சிப்பிள்ளை என்ற பெண் உயிரிழந்தார். ஸ்காபுரோவில் Eglinton மற்றும் Midland சந்திப்புக்கு அருகாமையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் நேற்றுக் காலை 11 மணியளவில், ஆலயம் சென்று வீடு திரும்பும்போது, வாகனம் மோதி  பலியாகியுள்ளார்.













கனடா, ரொரன்டோவில், உள்ள ஸ்காபுரோவில் நேற்று காலை நடந்த விபத்தில் 71 வயதான சிவலோகநாதன் காமாட்சிப்பிள்ளை என்ற பெண் உயிரிழந்தார்.
ஸ்காபுரோவில் Eglinton மற்றும் Midland சந்திப்புக்கு அருகாமையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் நேற்றுக் காலை 11 மணியளவில், ஆலயம் சென்று வீடு திரும்பும்போது, வாகனம் மோதி பலியாகியுள்ளார்.

ரொரன்டோ போக்குவரத்துச் சபையின் (TTC) பேருந்தில் இருந்து இறங்கும் பொழுதில் கால் தவறி வீழ்ந்த நிலையில் பேருந்திற்குப் பின்னால் வந்த வாகனத்தால் மோதப்பட்டு இவர் மரணமடைந்துள்ளதாக ரொரன்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சிவலோகநாதன் காமாட்சிப்பிள்ளையை அவரது சகோதரர் அடையாளம் காட்டியுள்ளார். தனது சகோதரியின் பிரம்பை வைத்தே அவரை அடையாளம் கண்டுள்ளார்.
அவர்இந்த பகுதியில் கிட்டத்தட்ட 15 வருடங்களாக வாழ்ந்து வருவதாக உயிரிழந்த பெண்ணின் சகோதரர் தெரிவித்துள்ளார். பிரதி செவ்வாய் தோறும், அவர் அந்த பேருந்தின் ஊடாகவே ஆலயத்துக்கு சென்று வருபவர் என்றும் இவ்வாறான நிலையிலேயே நேற்றைய தினம் இந்த துயர சம்பவத்திற்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.இந்த விபத்து சம்பவம் தொடர்பில் ரொரன்டோ பொலிஸார் தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.