புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

செவ்வாய், ஜூலை 11, 2017

வலிகாமம்- மல்லாகம் பகுதியில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த மாணவி, ஒருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு

வலிகாமம்- மல்லாகம் பகுதியில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த மாணவி, ஒருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு,
இரண்டு மணிநேரத்தின் பின்னர், தென்மராட்சி வரணிப் பகுதியில் வானில் இருந்து தள்ளி விழுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்.
வலிகாமம்- மல்லாகம் பகுதியில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த மாணவி, ஒருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு, இரண்டு மணிநேரத்தின் பின்னர், தென்மராட்சி வரணிப் பகுதியில் வானில் இருந்து தள்ளி விழுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்.

மல்லாகத்தில் இன்று காலை 7.30 மணியளவில் 18 வயதுடைய மாணவி ஒருவர் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது, வெள்ளை நிற வானில் வந்த 6 பேரை கொண்ட கும்பல் பின்தொடர்ந்து சென்றுள்ளது. மாணவி வீதியைக் கடப்பதற்காக மஞ்சள் கோட்டை அண்மித்த போது வானில் வந்த குழுவினர் மாணவியை இழுத்துக் கடத்தி சென்றனர்.

கடத்திச் சென்றவர்கள் மாணவிக்கு ஏதோ ஒரு வகையான பானத்தை கொடுக்க முயற்சி செய்துள்ளனர். எனினும், மாணவி கடத்தல்காரர்களுடன் கடுமையாக போராடினார். இதன் காரணமாக கடத்தல்காரர்கள் மாணவியை வரணி பகுதியில் வானில் இருந்து தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதி மக்கள் மாணவியை மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர். இதையடுத்து, மேலதிக சிகிச்சை மற்றும் பரிசோதனைகளுக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்