திங்கள், ஜூலை 24, 2017

கடலில் தத்தளித்த காட்டு யானைகள் கடற்படையினரால் மீட்பு


திருகோணமலை கடல் பகுதியில் உயிருக்குப் போராடிய இரண்டு காட்டு யானைகள் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு காட்டுக்குள்
விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் இரு காட்டுயானைகள் கடலில் தத்தளிப்பதனை கடல் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அவதானித்தனர்.
  
அதனைத் தொடர்ந்து கடற்படையின் மூன்று தாக்குதல் படகுகளும், சுழியோடிகளும் இணைந்து குறித்த யானைகளை பாதுகாப்பாக மீட்டதோடு, அவை வன ஜீவராசியினரின் ஒத்துழைப்போடு கரைக்கு கொண்டு வரப்பட்டன. கடந்த 11ஆம் திகதியும் கடலில் மூழ்கிய காட்டுயானை ஒன்றும் இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.