சனி, ஜூலை 22, 2017

முல்லைத்தீவில் நேற்றிரவு பாரிய தீவிபத்து! - எண்ணெய்க் களஞ்சிய சாலை தப்பியது

முல்லைத்தீவு இலங்கை போக்குவரத்து சபைக்கு அண்மையில் நேற்றிரவு ஏற்பட்ட பாரிய தீ, இராணுவத்தினரின் உதவியுடன்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று இரவு 8.30 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபை டிப்போவிற்கு அண்மையில் பாரிய தீவிபத்து ஏற்பட்டது. இதில் சில பனை மரங்கள் எரிந்து நாசமானதுடன் இலங்கை போக்குவரத்து சபை எண்ணெய்க் களஞ்சிய சாலையையும் நெருங்கியது.
முல்லைத்தீவு இலங்கை போக்குவரத்து சபைக்கு அண்மையில் நேற்றிரவு ஏற்பட்ட பாரிய தீ, இராணுவத்தினரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று இரவு 8.30 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபை டிப்போவிற்கு அண்மையில் பாரிய தீவிபத்து ஏற்பட்டது. இதில் சில பனை மரங்கள் எரிந்து நாசமானதுடன் இலங்கை போக்குவரத்து சபை எண்ணெய்க் களஞ்சிய சாலையையும் நெருங்கியது.

இதனைதொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் விரைவாக செயற்பட்டு தீயினை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது, சேத விபரங்கள் ஆகியன தெரியாத நிலையில், இது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.