தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வெள்ளி, ஜூலை 14, 2017

வந்துட்டோம்னு சொல்லு... திரும்பி வந்துட்டோம்னு சொல்லு...': சென்னை சூப்பர் கிங்ஸ் தடை நீங்கியது

'சென்னை சூப்பர் கிங்ஸ்'... இந்தப் பெயரை புறக்கணித்துவிட்டு ஐ.பி.எல் குறித்து பேசி விட முடியாது. இரண்டு முறை ஐ.பி.எல் சாம்பியன், இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் சாம்பியன், நான்கு முறை ஐ.பி.எல் ரன்னர்ஸ்-அப், இரண்டு முறை அரையிறுதிப் போட்டிக்கு தகுதி என்று டி-20 போட்டிகளை ஆதிக்கம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ். பங்கேற்ற அனைத்து ஐ.பி.எல் போட்டிகளிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ்தான்.

CSk


கேப்டன் தோனி, ரெய்னா, பிராவோ, அஸ்வின், மெக்குல்லம், ஸ்மித், ஜடேஜா என்று லெஜன்ட்ஸ்கள் சூழ் அணியாக இருந்தது. இதனிடையே, கடந்த 2015-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சூதாட்டப் புகார் எழுந்தது. இதனால், அந்த இரண்டு அணிகளும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டன. இந்தத் தடை இந்த ஆண்டுடன் முடிவடைகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஏற்கெனவே இந்த சீசனில் தோனி தலைமையில் களமிறங்குவோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது.


ஆனால், அந்தத் தடை இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிந்துள்ளது என்பதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ். மீண்டும் இந்த சீசனில் (2018) சென்னை சூப்பர் கிங்ஸ் ரீ-என்ட்ரி கொடுக்கிறது. இது குறித்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில், "வந்துட்டோம்னு சொல்லு, திரும்பி வந்துட்டோம்னு சொல்லு.. விசில் போடு" என ட்வீட்டியுள்ளது.