செவ்வாய், ஜூலை 18, 2017

ஜிம்பாப்வேயை வீழ்த்தி பதிலடி..சாதனை படைத்தது இலங்கை

இலங்கை, ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி தொடரில் இலங்கை அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
இதன் மூலம் ஒரு போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை கைப்பற்றியது. மேலும், ஆசிய மண்ணில் நான்காவது இன்னங்சில் அதிக ஓட்டங்களை
விரட்டி வெற்றிப்பெற அணி என்ற சாதனை இலங்கை அணி படைத்துள்ளதுகடந்த யூலை 14ம் திகதி கொழும்பு மைதானத்தில் தொடங்கிய போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 356 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர், முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய சந்திமால் தலைமையிலான இலங்கை அணி 346 ஓட்டங்கள் எடுத்தது. 10 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணி ரசாவின் சதத்தின் உதவியுடன் 377 ஓட்டங்கள் எடுத்தது.
388 என்ற கடின வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 170 ஓட்டங்கள் எடுத்திருந்து.
கடைசி நாள் ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் இலங்கையின் வெற்றிக்கு 218 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
இந்நிலையில் கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கிய இலக்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது, சிறப்பாக விளையாடி வந்த மெண்டீஸ் 66 ஓட்டங்களிலும், மேத்யூஸ் 25 ஓட்டங்களிலும் வெளியேறினார்கள்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த திக்வெல்ல, குணரத்ன நிதானமாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றனர். நிதானமாக விளையாடி வந்த திக்வெல்ல 81 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர், குணரத்னவுடன் ஜோடி சேர்ந்த பெரேராவும் நிதானமாக விளையாட இலங்கை அணி வெற்றி இலக்கை எட்டியது. சிறப்பாக விளையாடி ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்கள் எடுத்த குணரத்ன ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
ஜிம்பாப்வே தரப்பில் அணித்தலைவர் கிரிமர் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். சொந்த மண்ணில் ஜிம்பாப்வேயிடம் ஒரு நாள் தொடரை இழந்த இலங்கை அணிக்கு இந்த டெஸ்ட் வெற்றி ஊக்கம் அளித்துள்ளது.