புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

செவ்வாய், ஜூலை 11, 2017

மாற்றுத் தலைமைக்கு இடமில்லை! – விக்னேஸ்வரன் திட்டவட்டமாக தெரிவிப்பு

மாற்றுத் தலைமைக்கு ஒரு போதும் இடமில்லை. ஒற்றுமையே பலம் என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
மாற்றுத் தலைமைக்கு ஒரு போதும் இடமில்லை. ஒற்றுமையே பலம் என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

கனேடியத் தூதுவருடனான சந்திப்புக்குப் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முதலமைச்சரிடம், தமிழர்களுக்கு மாற்றுத் தலைமை வேண்டும். அந்த மாற்றுத் தலைமை சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் அமைவது சிறந்ததென கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் தலைமை அவசியமென்பதனை ஏற்றுக்கொள்கின்றீர்களா என முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.

“மாற்றுத் தலைமை தொடர்பில் இப்போது முடிவு எடுப்பதற்கு ஒன்றுமில்லை. முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம். எமது அரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். இந்த இடத்தில் எமது தனிப்பட்ட குரோதங்கள் மற்றும் முரண்பாடுகளை முன்வைத்து பிரிவுகளை ஏற்படுத்துவது எமக்கு நல்லதல்ல. இங்கு எந்தவித பிரிவினைக்கும் இடமில்லை என்றார்