தமிழர்கள் தனிநாடு கேட்க நியாயம் உண்டு, சந்திரிக்கா-பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன்காலமானார்-சிவசக்தி ஆனந்தனுக்கு ஏதோ பிரச்சினை சரவணபவன் தெரிவிப்பு-மோடியும் சுவிட்சர்லாந்து ஜனாதிபதி அலைன் பெர்செட்டும் சந்திப்பு-சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு – ஆவணங்களுடன் தயாராகிறது ஐதேக 70

வெள்ளி, ஜூலை 07, 2017

முதலில் கட்சி வீட்டை சரி செய்யுங்கள்! - கூட்டமைப்பை சாடிய சுவாமிநாதன்

பொருத்து வீட்டுத் திட்டம் குறித்து குற்றம் சுமத்துகின்றவர்கள் முதலில் கட்சி வீட்டை சரி செய்ய வேண்டும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார். நேற்று சபை ஒத்திவைப்பு வேளையில் தீர்மானத்தின் மீது உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

பிரதமரின் ஆலோசனையின் பிரகாரமே இந்த வீட்டுத் திட்டத்தை கொண்டு வந்ததாகவும் எக்காரணத்திற்காக இதற்கு எதிர்ப்பு வெளியிடுகின்றனர் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் பெரிய மாளிகையில் வாழ்கின்றனர் எனவும் அவர்கள் இத்திட்டத்திற்காக எந்த ஒரு உதவியும் செய்ய வில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தினார். இவ்வாறு எதிர்ப்பை வெளியிடுகின்றவர்கள் தங்களது திட்டத்தை முன்மொழிய வேண்டும் எனவும் அவர்கள் மக்களுக்காக எதனையும் செய்யவில்லை என்றும் தெரிவித்தார்