புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

செவ்வாய், ஜூலை 11, 2017

முதலமைச்சர் விக்கியைச் சந்தித்துப் பேசினார் கனேடியத் தூதுவர்

இலங்கைக்கான கனேடிய தூதுவர் ஷெல்லி வைட்னிங் அம்மையார் இன்று, வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனை, சந்தித்துப் பேச்சு நடத்தினார். கனேடிய தூதுவர் ஷெல்லி வைட்னிங் அம்மையார் புகைப்படக் கண்காட்சியொன்றை திறந்து வைப்பதற்காக, யாழ்ப்பாணத்துக்கு இன்று பயணம் மேற்கொண்டிருந்தார். இதன் போதே, முதலமைச்சரை அவரது செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட் முடுதலமைச்சர் விக்னேஸ்வரன், பதவியில் இருந்து விடை பெற்றுச் செல்வதனால், கனேடிய தூதுவர் மரியாதையின் நிமித்தம் சந்திப்பினை மேற்கொண்டுள்ளார். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு வடபகுதிக்கு வரும் போது, அரசாங்கத்தின் புலனாய்வாளர்கள் பின்தொடர்ந்து வருவார்கள். அந்த நிலை தற்போது மாறியுள்ளது. நாளுக்குநாள் முன்னேறிக்கொண்டு செல்கின்றீர்கள் என்று உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் திறக்காமை மனவருத்தத்தினை தருகின்றது. அந்த அலுவலகம் செயற்பட்டால், மக்கள் தமது பிரச்சினைகளை உரிய முறையில் தீர்த்துக்கொள்ள ஏதுவாக இருக்கும். அந்த வகையில், கனடா வாழ் மக்கள் தமது உதவிகளை செய்வதற்கு காத்திருக்கின்றார்கள். அவற்றினை எதிர்காலத்தில் சரியான முறையில் வடமாகாண மக்களுக்கு நடைமுறைப்படுத்துவோம் என்று அவர் உறுதியளித்துள்ளாதாக முதலமைச்சர் கூறினார்.