சனி, ஜூலை 15, 2017

இப்போதைய செய்தி ///////////////////////////////////////////////////////// வித்தியா கொலை வழக்கு – முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் கைது!!


வித்தியா கொலை வழக்கு – முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் கைது!!
Share
புங்குடுதீவு மாணவி கொலை வழக்குத் தொடர்பில் அந்தச் சந்தர்ப்பத்தில் வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றிய லலித் ஜயசிங்க கொழும்பில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது மத்திய மாகாண பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றும் லலித் ஜயசிங்க இன்று குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். விசாரணைகளின் பின்னர் பி.ப. 2.45 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

குற்ற விசாரணை திணைக்கள விசாரணையை அடிப்படையாக கொண்டு சட்டமா அதிபர் திணைக்களம் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று சட்டமா திணைக்கள அதிகாரி ஒருவரை மேற்கொள்காட்டிச் செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேலதிக விசாரணைகள் நடப்பட்டுவரும் நிலையில், நாளை ஊர்காவற்றுறை நீதிமன்றில் அவரை முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

புங்குடுதீவு மாணவி 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி கூட்டு வன்கொடுமையின் பின்னர் கொலை செய்யப்பட்டிருந்தார். அது தொடர்பான விசாரணை யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றில் நடைபெறுகின்றது.

கொலைச் சம்பத்தின் முக்கிய சந்தேகநகரான சுவிஸ் குமார் என்பவர் தப்பிச் செல்வதற்கு உதவியதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.