திங்கள், ஜூலை 24, 2017

அதிரடிப் படை துப்பாக்கிச் சூடு! – மட்டக்களப்பில் பதற்றம்!!

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர் என்றும், ஆற்றுக்குள் குதித்து தப்பிச் செல்ல முற்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.

ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது. கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முந்தல்குமாரவேலியார் கிராமம் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அந்தப் பகுதியில் மணல் ஏற்றும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தடுக்கும் நோக்கில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர் என்று கூறப்படுகின்றது.