வியாழன், ஜூலை 13, 2017

பொருத்து வீட்டுத் திட்டத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொருத்து வீடுகளை அமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார். பொருத்து வீடுகளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்தப் பொருத்து வீடுகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் காலநிலைக்கு பொருத்தமற்றவை எனப் பல தரப்பினரும் சுட்டிக்காட்டிய போதும் பொருத்து வீடுகள் அமைப்பதில் மீள்குடியேற்ற அமைச்சர் விடாப்பிடியாக உள்ளார். அதையடுத்தே தடை உத்தரவு கோரும் இந்த மனு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொருத்து வீடுகள் அமைப்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.