புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

சனி, ஜூலை 08, 2017

தீவக கல்வி வலயம் தடகளத்தில் சாதிப்பு

தீவக கல்வி வலயம் தடகளத்தில் சாதிப்பு

வட­மாகாண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் முன்­னேற்­றம் காண்­கி­றது தீவக கல்வி வலய அணி.

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­ க­ளத் தொடர் யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் நடை­பெற்று வரு­கி­றது.
இதில் தீவ­க கல்வி வல­யம் நேற்­றும் நேற்­று­முன்­தி­ன­மும் நடை­பெற்ற தட­க­ளத்­தில் 12 வய­துக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான உய­ரம் பாய்­த­லில் நயி­னா­தீவு சிறி­க­ணேசா கனிஷ்ட வித்­தி­யா­ல­யத்தை பிர­தி­நி­தித்­து­வம் செய்த எஸ்.துயா­ளினி தங்­கப் பதக்­கத்­தை­யும் நேற்று நடை­பெற்ற 18 வய­துக்­குட்­பட்ட ஆண்­க­ளுக்­கான உய­ரம் பாய்­த­லில் வேலணை மத்­திய கல்­லூ­ரியை பிர­தி­நி­தித் து­வம் செய்த பி.சுபீ­ஜன் தங்­கப் பதக்­கத்­தை­யும், நெடுந்­தீவு மகா வித்­தி­யா­ல­யத்­தைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த எஸ்.திருட்­சிகா 800 மீற்­றர் மற்­றும் 200 மீற்­றர் என்­ப­வற்­றில் வெள்­ளிப் பதக்­கத்­தை­யும், 12 வய­துக்­குட்­பட்ட பெண்­கள் பிரிவு நீளம் பாய்­த­லில் நயி­னா­தீவு சிறி­க­ணேசா கனிஷ்ட வித்­தி­யா­ல­யத்­தைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த எம்.முப்­லிகா வெள்­ளிப் பதக்­கத்­தை­யும் கைப்­பற்­றி­னர்.
கடந்த ஆண்டு நடை­பெற்ற தட­க­ளத்­தில் தீவ­கம் கல்வி வல­யம் இரு பதக்­கங்­களை மாத்­தி­ரம் கைப்­பற்­றி­யது. கடந்த வரு­டத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் நடப்பு வரு­டத்­தில் அந்த அணி மிகச் சிறந்த முன்னேற்­றத்­தைக் கண்­டுள்­ளது.