தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வெள்ளி, ஜூலை 14, 2017

வவு­னியா மாவட்­டத்­தில் சிங்­கள மக்­க­ளுக்குக் கல் வீடு தமி­ழர்­க­ளுக்குப் பொருத்து வீடு

: வவு­னியா மாவட்­டத்­தில் வாழும் சிங்­கள மக்­க­ளுக்கு 800 கல்­ வீடு­கள் அமைக்­கப்­ப­டு­கின்­றன. ஆனால் அங்கு வாழும் தமிழ் மக்­க­ளுக்கு ஆயி­ரத்து 800 பொருத்து வீடு­கள் அமைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கி­றது என்று குற்­றஞ் சாட்­டப்பட்­டது. வவு­னியா மாவட்­டத்­தின் பொஸ்­வே­வாப் பகு­தி­யில் உள்ள சிங்­கள மக்­க­ளுக்கு 800 கல்­ வீடு­கள் தேசிய வீட­மைப்பு அதி­கார சபை­யால் அமைக்­கப்­ப­டு­கின்­றன. அவை ஒவ்­வொன்­றும் 5.5 லட்­சம் ரூபா பெறு­ம­தி­யில் அமைக்­கப்­ப­டு­கின்­றன.
வவு­னியா மாவட்­டத்­தில் வாழும் சிங்­கள மக்­க­ளுக்கு 800 கல்­ வீடு­கள் அமைக்­கப்­ப­டு­கின்­றன. ஆனால் அங்கு வாழும் தமிழ் மக்­க­ளுக்கு ஆயி­ரத்து 800 பொருத்து வீடு­கள் அமைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கி­றது என்று குற்­றஞ் சாட்­டப்பட்­டது. வவு­னியா மாவட்­டத்­தின் பொஸ்­வே­வாப் பகு­தி­யில் உள்ள சிங்­கள மக்­க­ளுக்கு 800 கல்­ வீடு­கள் தேசிய வீட­மைப்பு அதி­கார சபை­யால் அமைக்­கப்­ப­டு­கின்­றன. அவை ஒவ்­வொன்­றும் 5.5 லட்­சம் ரூபா பெறு­ம­தி­யில் அமைக்­கப்­ப­டு­கின்­றன.

அந்­தப் பகு­தி­யில் 2013ஆம் ஆண்­டின் இறு­தி­யில் வந்து குடி­யே­றிய குடும்­பங்­களே அதி­க­மாக வாழ்­கின்­றன. இவ்­வாறு வாழும் குடும்­பங்­ கள் 3 பிரி­வு­க­ளா­கப் பிரிக்­கப்­பட்டு ஒரு பிரி­வி­னர் முல்­லைத்­தீவு மாவட்­டத்­து­ட­னும் இன்­னும் ஓர் பிரி­வி­னர் வவு­னியா மாவட்­டத்­து­ட­னும் மற்­றொரு ­பிரி­வி­னர் அநு­ரா­த­பு­ரம் மாவட்­டத்­து­டனும் இணைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இவ்­வாறு 3 மாவட்­டங்­க­ளின் பிர­தே­சங்­க­ளுக்­கும் பகுதி பகு­தி­யா­கக் காணப்ப­ டும் அனைத்து மக்­க­ளுக்­கு­மான வீட்­டுத் தேவையை நிறைவு செய்­யும் பொறுப்பு வவு­னியா மாவட்­டச் செய­ல­கத்­தி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த ­நிலை­யில் தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளும் தமிழ் மக்­க­ளில் கணி­ச­மா­னோ­ரும் எதிர்ப்­புத் தெரி­விக்­கும் பொருத்து வீடு­களை வவு­னியா மாவட்­டத்­தில் வாழும் ஆயி­ரத்து 800 குடும்­பங்­க­ளுக்கு வழங்­க­வுள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது. இதனை வழங்­கும் நட­வ­டிக்­கையை மீள்­கு­டி­யேற்ற அமைச்சு முன்­னெ­டுத்­துள்­ளது