புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

சனி, ஜூலை 08, 2017

மன்னார்- கரிசல் புனித கப்பலேந்தி மாதா ஆல மன்னார்- கரிசல் புனித கப்பலேந்தி மாதா ஆலய காணியில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அமைக்கப்பட்ட வேலியை, பொலிசார் முன்னிலையில் சிலர் சேதமாக்கியதால், பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. ய காணியில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அமைக்கப்பட்ட வேலியை, பொலிசார் முன்னிலையில் சிலர் சேதமாக்கியதால், பதற்றநிலை ஏற்பட்டுள்ளது

மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக, நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் நேற்று காலை 10 மணியளவில் மன்னார்- கரிசல் புனித கப்பலேந்தி
மாதா ஆலய காணியில் சுற்றுவேலி அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. கரிசல் புனித கப்பலேந்தி மாதா ஆலய காணி விவகாரத்தினை தொடர்ந்து கடந்த சில தினங்களாக அந்த பகுதியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக ஆலய காணிக்கு சுற்று வேலி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் நீதிமன்ற பதிவாளர் இந்த இடத்தில் இருந்து சென்ற சில நேரத்தில் பெரிய கரிசல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக இடையூறுகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. அமைக்கப்பட்ட சுற்று வேலிக்கான தூண்களை கடமையில் இருந்த பொலிஸார் முன்னிலையில் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று மதியம் இந்த காணிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதுடன், பெரிய கரிசல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட முஸ்ஸிம்கள் சிலர் ஜூம்மா தொழுகையின் பின்னர் அணி திரண்டு வந்து இந்த காணிக்கு போடப்பட்டிருந்த ஏனைய வேலித் தூண்களையும் உடைத்து அந்த பகுதி மக்களை அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், சுற்று வேலிக்கான தூண்களை உடைத்து வன்முறையில் ஈடுபட்டவர்களை சம்பவ இடத்தில் கடமையில் இருந்த பொலிஸார் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். கரிசல் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குச் சென்ற குறித்த நபர்கள் வீட்டின் பின் புறம் சென்று வீட்டு அறை ஒன்றிற்கு தீ வைத்துள்ளனர்.
இதன் காரணமாக இந்த வீட்டின் அறை ஒன்றினுள் காணப்பட்ட பல லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எறிந்து நாசமாகியுள்ளது. இதன் போது வீட்டில் காணப்பட்ட மாதாவின் திருச்சொருபமும் எரியூட்டப்பட்டுள்ளது. இதனால் கரிசல் கிராம மக்கள் மத்தில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பொலிஸார் விசேட பாதுகாப்பு கடமையில் இருந்த போது இந்த சம்பவம் இடம் பெற்றுதாக கரிசல் கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை சம்பவ இடத்திற்கு நேற்று மாலை சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவிக்கையில், நான் அங்கு உள்ள பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்ததோடு வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். அவர் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார். வன்முறைகளில் ஈடுபட்ட பெரிய கரிசல் கிராமத்தைச் சேர்ந்தவர்களை உடனடியாக கைது செய்ய மன்னார் பொலிஸாருக்கு வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸார் முன்னிலையில் இடம் பெற்ற இந்த சம்பவத்தை பொலிஸார் நேரடியாக பார்த்துள்ளதோடு ஆதாரத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர். எனினும் இதுவரை சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்யவில்லை. நாளை மாலைக்குள் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படாது விட்டால் மறு நாள் ஞாயிற்றுக்கிழமை (9) பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும். மேலும், வன்முறையினை தோற்றுவித்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு குறித்த கிராமத்தில் அமைதி நிலை ஏற்பட பொலிஸார் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.