புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வியாழன், ஜூலை 06, 2017

ஆளே அடையாளம் தெரியலையே!’ - சிறையில் கதறியழுத சசிகலா..!

பெங்களூரு சிறையில் சசிகலாவைச் சந்தித்த கட்சியினரிடம், அவர் கதறி அழுததாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக டி.டி.வி.தினகரன், டாக்டர் வெங்கடேஷிடம் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தி, சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், டாக்டர் வெங்கடேஷ், புகழேந்தி ஆகியோர் சந்தித்துப் பேசினர். அவர்களுக்கு முன்னதாக, ராமலிங்கம் எம்எல்ஏ, தமிழ்மகன் உசேன், நடிகர்கள் ஜெ.கே.ரித்தீஷ், ஜெ.எம்.பஷீர் என்ற விஜய்கார்த்திக் ஆகியோர் சந்தித்தனர். சுடிதாரில் வந்த சசிகலாவைப் பார்த்ததும், தமிழ்மகன் உசேன் கதறி அழுதுள்ளார். அதைப் பார்த்த சசிகலாவின் கண்களிலும் கண்ணீர் கசிந்தது. இதைக் கண்ட ராமலிங்கம் எம்எல்ஏ, நடிகர்கள் ஜெ.கே.ரித்தீஷ், ஜெ.எம்.பஷீர் ஆகியோரும் அழுதனர். இதனால், சில நிமிடங்கள் அமைதியாகக் கடந்தன.

‘எல்லோரும் நல்லா இருக்கீங்களா' என்று சசிகலா கேட்டதும், ஆமாம் என்று தலையை அசைத்தனர். உடனே தமிழ்மகன் உசேன், ‘சின்னம்மா, நீங்கள் இல்லாததால் கட்சியே சரியில்லை. ஆளாளுக்கு அதிகாரம் செய்கிறார்கள்' என்று சொன்னதும், சசிகலா முகம் மாறியதாம். 'நான் வெளியில் வந்தபிறகு எல்லோரையும் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள், என்னை சந்திக்க வந்தது சந்தோஷமாக இருக்கிறது. இரண்டு அணிகளும் சேரட்டும். அதுவரை அமைதியாக இருப்போம்' என்று சொல்லியிருக்கிறார் சசிகலா. அதன்பிறகு, தமிழக அரசியல் சூழ்நிலை, ஆட்சி, கட்சி நிலவரம் ஆகியவை தொடர்பாகப் பேசியுள்ளனர். இதற்கிடையில், சசிகலாவைச் சந்திக்க டி.டி.வி.தினகரனும், டாக்டர் வெங்கடேஷ், புகழேந்தி ஆகியோர் காத்திருக்கும் தகவல் சொல்லப்பட்டது. உடனடியாக அவர்களைச் சந்திக்க சசிகலா சென்றுவிட்டார்.

சசிகலா சந்திப்புகுறித்து அ.தி.மு.க. வட்டாரங்கள் கூறுகையில், "சசிகலா, டி.டி.வி.தினகரன், டாக்டர் வெங்கடேஷ், புகழேந்தி ஆகியோர் சந்திப்பு, ஒன்றரை மணி நேரம் நடந்தது. அப்போது, 'அ.தி.மு.க. அழிந்துவிடக்கூடாது. எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சியை நிச்சயம் காப்பாற்ற வேண்டும். அதற்காக, பிளவுப்பட்ட அ.தி.மு.க அணிகள் ஒன்றிணைய வேண்டும்' என்று ஓப்பனாகவே சசிகலா சொல்ல, அதை தினகரனும் வெங்கடேஷும் அமைதியாகக் கேட்டனர்.

அடுத்து, சீராய்வு மனு தீர்ப்புகுறித்து சசிகலா கேட்டுள்ளார். அதுதொடர்பாக நீண்ட நேரம் விவாதம் நடந்தது. அதன்பிறகு, மன்னார்குடி குடும்ப விவகாரம் தொடர்பான ஆலோசனை நடந்தது. அப்போது, 'குடும்பத்தினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும்' என்று அன்புக் கட்டளையிட்டார் சசிகலா. அதற்கு, தினகரனும் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு, தன்னுடைய உடல்நலம்குறித்தும் சிறையில் நடக்கும் சம்பவங்கள்குறித்தும் விரிவாகத் தெரிவித்தார் சசிகலா. குடியரசுத் தேர்தலில் பி.ஜே.பி-க்கு ஆதரவு என்று தெரிவித்ததன் எதிரொலியாக, சிறையில் நடக்கும் மாற்றங்கள்குறித்தும் கூறினார். அப்போது, மறுசீராய்வு மனு தீர்ப்பு நிச்சயம் நமக்கு சாதகமாக அமையும். அதற்காகத்தான் மும்பைக்குச் சென்ற தகவலையும் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார். அங்கு ஷீரடி சாய்பாபா கோயிலில் வேண்டுதல் செய்ததாகவும் கூறியிருக்கிறார் தினகரன். எல்லாவற்றையும் கேட்ட சசிகலா, 'அ.தி.மு.க. அழிந்துவிட்டால், நம்முடைய நிலைமை சிக்கலாகிவிடும் எனவே, நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் கவனமாக இருக்க வேண்டும்' என்று ஆலோசனை சொல்லியிருக்கிறார்'' என்றனர்.

தினகரன்

காய்கறிகளைக் கொடுத்த கட்சியினர்

சசிகலாவைச் சந்தித்த கட்சியினர், பலவகைக் காய்கறிகளையும் அன்பளிப்பாகக் கொடுத்துவருகின்றனர். அதைப் புன்சிரிப்புடன் சசிகலா பெற்றுக்கொள்கிறார். மேலும், கட்சியினரிடம், 'நான் சிறைக்குள் இருந்தாலும் உங்களை எல்லாம் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார். இதில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளதாக கட்சியினர் கருதுகின்றனர்.

அமைச்சர் பதவி கேட்ட எம்எல்ஏ

சசிகலாவைச் சந்தித்த ராமலிங்கம் எம்எல்ஏ, 'தனக்கு அமைச்சர் பதவி வேண்டும்' என்று கேட்டிருக்கிறார். அதற்கு சசிகலா, 'நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று சிரித்த முகத்துடன் தெரிவித்துள்ளார். அடுத்து, தமிழ்மகன் உசேன், 'தனக்கு வக்பு வாரியத் தலைவர் பதவியைக் கேட்க', 'இன்னும் அந்தப் பதவியை உங்களுக்குக் கொடுக்கவில்லையா?' என்று கேட்டிருக்கிறார்.

வெள்ளைச் சட்டை டு கலர் சட்டை

தினகரன்

சசிகலாவைச் சந்திக்கச் சென்ற கட்சியினர், வெள்ளைச் சட்டையில் சென்றுள்ளனர். சசிகலாவைச் சந்திக்கும் தகவல், மீடியாக்களுக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக சிறைத்துறை நிர்வாகம், கட்சியினரை வெள்ளைச் சட்டையை மாற்றும்படி தெரிவித்துள்ளது. உடனடியாக, அங்கேயே கலர் சட்டைகளை வாங்கி அணிந்துள்ளனர். அதன்பிறகே கட்சியினர் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.