வெள்ளி, ஜூலை 21, 2017

வித்தியா கொலையில் கைதான பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்க சேவையில் இருந்து இடைநிறுத்தம்

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். சுவிஸ் குமார் என்ற சந்தேக நபர் தப்பிச் செல்ல உதவியதாக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் நேற்று முதல் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க பணி இடைநிறுத்தம் செய்ய தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பரிந்துரைக்கு அமைய இவ்வாறு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.