புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

திங்கள், ஜூலை 10, 2017

பாலியல் தொல்லை கொடுத்த கணவரை கல்லை போட்டு கொன்ற மனைவி

மது அருந்தி விட்டு தினமும் பாலியல் தொல்லை கொடுத்ததால் கணவரை கொலை செய்ததாக மனைவி பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள ஆவடியை அடுத்த பொத்தூர் வள்ளிவேலன் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (30), இவரது முதல் மனைவி இவரை பிரிந்து சென்று விட்டார்.


மது அருந்தி விட்டு தினமும் பாலியல் தொல்லை கொடுத்ததால் கணவரை கொலை செய்ததாக மனைவி பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள ஆவடியை அடுத்த பொத்தூர் வள்ளிவேலன் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (30), இவரது முதல் மனைவி இவரை பிரிந்து சென்று விட்டார்.

இதையடுத்து கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் யுவராணி (24) என்ற பெண்ணை ராஜ்குமார் திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு கார்த்திக் (3) என்ற மகன் உள்ளான்.ராஜ்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தினமும் குடித்து விட்டு வந்து யுவராணியை கொடுமைப்படுத்தியதாகவும் தெரிகிறது. நேற்று முன்தினம் வழக்கம் போல் குடித்து விட்டு வந்த ராஜ்குமார் மனைவியை அடித்து உதைத்துள்ளார், பிறகு போதையில் தூங்கியுள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த யுவராணி தூங்கிக் கொண்டிருந்த ராஜ்குமார் தலையில் சிமெண்டு கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.பின்னர் நேராக காவல் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்துள்ளார்.கணவரை கொலை செய்ததற்கான முழு காரணத்தை வாக்குமூலமாக யுவராணி பொலிசாரிடம் கூறியுள்ளார்.

வாக்குமூலம் பின் வருமாறு:-எனது கணவர், தினமும் இரவில் குடித்து விட்டு வந்து பாலியல் தொல்லை கொடுத்தார். இயற்கைக்கு மாறான உறவில் ஈடுபட என்னை வற்புறுத்தி வந்தார்.சம்பவத்தன்று வழக்கத்தை விட அதிகளவில் தொல்லை கொடுத்தார். அதற்கு நான் உடன்படாததால் என்னை அடித்து உதைத்தார்.இதே நிலை நீடித்தால் என்னை கொலை செய்து விடுவார் என பயந்தே அவரை கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.பின்னர், யுவராணி மீது வழக்குப்பதிவு செய்த பொலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்கள்