புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

திங்கள், ஜூலை 10, 2017

மாடு வாங்க பணமில்லாததால் மகள்களை வைத்து நிலத்தை உழுத விவசாயி!

மாடு வாங்க பணமில்லாததால், தனது 2 மகள்களை வைத்து நிலத்தை உழுதுள்ளார் மத்திய பிரதேச விவசாயி ஒருவர்.
மத்திய பிரதேசத்தில் கடந்த மாதம் விவாசாயிகள் தங்கள் பொருள்களுக்கு முறையான விலை நிர்ணயிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு போராட்டம் வெடித்தது. மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சௌகான் அளித்த வாக்குறுதியை ஏற்று அங்கு போராட்டம் கைவிடப்பட்டது.


மாடு வாங்க பணமில்லாததால், தனது 2 மகள்களை வைத்து நிலத்தை உழுதுள்ளார் மத்திய பிரதேச விவசாயி ஒருவர். மத்திய பிரதேசத்தில் கடந்த மாதம் விவாசாயிகள் தங்கள் பொருள்களுக்கு முறையான விலை நிர்ணயிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு போராட்டம் வெடித்தது. மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சௌகான் அளித்த வாக்குறுதியை ஏற்று அங்கு போராட்டம் கைவிடப்பட்டது.

இதனிடையே மத்திய பிரதேசம் பசந்த்பூர் கிராமத்தில் மாடு வாங்க பணமில்லாததால், மகள்களை வைத்து நிலத்தை உழுதுள்ளார் விவசாயி ஒருவர். 'மாடுகள் வாங்கவோ, அதை பரமாறிக்கவோ போதுமான பணம் என்னிடத்தில் இல்லை. அதனால் தான் எனது மகள்களை வைத்து நிலத்தை உழுகிறேன். மேலும் பண நெருக்கடி காரணமாக எனது இரு மகள்களும் படிப்பை நிறுத்திவிட்டனர்' என்று கூறியுள்ளார் அந்த ஏழை விவசாயி