www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வியாழன், ஜூலை 20, 2017

கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு நடக்கவில்லை- ஏமாற்றியது இராணுவம்

முல்லைத்தீவு - கேப்பாப்புலவில் இன்று விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட 180 ஏக்கர் காணிகளும் காடுகள் நிறைந்த பகுதி என தமக்கு இப்போது தான் தெரியும் என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள 180 ஏக்கர் காணி விடுவிக்கப்படுவதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்திருந்த நிலையில் குறித்த பகுதிக்கு இன்று வருகை தந்தார்.

எனினும் தாம் வருகை தந்த பிறகே குறித்த பகுதிகள் காடு என்பது தெரிந்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தினரால் விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்ட பகுதிகள் காடுகள் என்பதை நேரில் சென்று அவதானித்த அமைச்சர் சுவாமிநாதன், இராணுவத்தின் உயர் அதிகாரிகளுடன் பேர்ச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.

குறித்த பேச்சுவார்த்தையின் பின்னர் கருத்து தெரிவித்த அமைச்சர், இராணுவத்தினர் விடுவிப்பதாக தெரிவித்த 180 ஏக்கர் காணிகளும் காடுகள் என எனக்கு இப்போதுதான் தெரியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஐவரை இந்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக எதிர்வரும் 26ஆம் திகதி கொழும்பிற்கு வருமாறு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.