வெள்ளி, ஜூலை 21, 2017

வடக்கு மாகாணசபையில் இன்று மீளாய்வு விவாதம்! - பிரச்சினைகள் சூடு பிடிக்க வாய்ப்பு

வடமாகாண சபையின் மூன்றரை வருட செயற்பாடுகள் தொடர்பாக மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு இன்று நடைபெறவுள்ளது.
வடமாகாண சபையின் மூன்றரை வருட செயற்பாடு தொடர்பாக ஆராய்வதற்கான விசேட அமர்வு ஒன்றை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா மற்றும் மாகாணசபை ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்திடம் கூட்டாக கோரிக்கை விடுத்திருந்தனர்.
வடமாகாண சபையின் மூன்றரை வருட செயற்பாடுகள் தொடர்பாக மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு இன்று நடைபெறவுள்ளது. வடமாகாண சபையின் மூன்றரை வருட செயற்பாடு தொடர்பாக ஆராய்வதற்கான விசேட அமர்வு ஒன்றை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா மற்றும் மாகாணசபை ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்திடம் கூட்டாக கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனையடுத்து கடந்த அமர்வில் மேற்படி விசேட அமர்வு 21ம் திகதி நடைபெறும் என அவைத்தலைவர் அறிவித்திருந்தமைக்கு அமைவாக இன்று விசேட அமர்வு நடைபெறவுள்ளது. இந்த அமர்வில் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட சிலரும், நீதிக்கான மாகாணசபை உறுப்பினர்கள் சிலரும் இணைந்து முதலமைச்சர் மீது விமர்சனங்களை முன்வைக்கக் கூடும் என முதலமைச்சருக்கு சார்பான மாகாண சபை உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

அதேவேளை கடந்த அமர்வில் வடமாகாண சபையின் மற்றைய 4 அமைச்சுக்களும் வருடாந்தம் தங்கள் முன்னேற்ற அறிக்கைகளை வழங்கி வரும் நிலையில் முதலமைச்சரின் அமைச்சு மட்டும் அந்த அறிக்கைகளை தரவில்லை. எனவே எதனை கொண்டு தாம் விவாதத்தில் பங்கெடுப்பதென ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் கூறியிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.