தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

புதன், ஜூலை 26, 2017

தமிழீழ இசைக் கல்லூரி பொறுப்பாளர் கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனை! -வவுனியா நீதிமன்றம் தீர்ப்பு



விடுதலைப் புலிகள் அமைப்புக்காக, கட்டாய ஆள் சேர்ப்பில் ஈடுபட்டார் என்று  குற்றம்சாட்டப்பட்ட, தமிழீழ இசைக் கல்லூரி பொறுப்பாளர் கண்ணதாசனுக்கு, வவுனியா மேல் நீதிமன்றம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கி, தீர்ப்பளித்துள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்புக்காக, கட்டாய ஆள் சேர்ப்பில் ஈடுபட்டார் என்று குற்றம்சாட்டப்பட்ட, தமிழீழ இசைக் கல்லூரி பொறுப்பாளர் கண்ணதாசனுக்கு,
வவுனியா மேல் நீதிமன்றம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கி, தீர்ப்பளித்துள்ளது.
   
கண்ணதாசன், அரசினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர். இவர் மீது, கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது பிள்ளையை பலவந்தமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் பிடித்துச் சென்று இணைத்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை வவுனியா மேல் நீதிமன்றில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது, பலவந்தமாக ஆள் சேர்ப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.