ஞாயிறு, ஜூலை 16, 2017

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படம் பிடித்த புலனாய்வுப் பிரிவினர், பொலிசார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கூழாமுறிப்பிலுள்ள உள்ள சுமார் 177 ஏக்கர் காடுகளை அழித்து , திட்டமிட்ட குடியேற்றங்களை மேற்கொள்ளும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாரிய எதிர்ப்புப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்துக்கு அருகிலுள்ள ஆலடிச் சந்தியிலிருந்து கூழாமுறிப்பு வரை சுமார் ஏழு கிலோமீற்றர் தூரத்துக்கு, இன்று காலை 11 மணியளவில் பேரணியாக மக்கள் நடந்து சென்றனர்.

இந்நிலையில், குறித்த போராட்டத்தை, பொலிஸார்,மற்றும் புலனாய்வுப் பிரிவினர் படம் பிடித்திருந்தனர்.