திங்கள், ஜூலை 24, 2017

வடக்கு கிழக்கில் நீதிமன்றங்கள் இயங்கவில்லை! - யாழ். பல்கலைக்கழகத்தில் அஞ்சலி

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து
, இன்று வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகள் நடத்திய பணிப்புறகணிப்பு போராட்டத்தினால் நீதி



மன்றங்கள். முடங்கின. அதேவேளை, கவனயீர்ப்பு, கண்டனப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.
யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து, இன்று வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகள் நடத்திய பணிப்புறகணிப்பு போராட்டத்தினால் நீதிமன்றங்கள். முடங்கின. அதேவேளை, கவனயீர்ப்பு, கண்டனப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.

திருகோணமலை சட்டத்தரணிகள் இன்று பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டதுடன், கண்டன ஆர்ப்பாட்டமொன்றிலும், ஈடுபட்டனர். திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கத்தால் திருகோணமலை நீதிமன்ற வளாகத்துக்கு முன்னால் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

யாழ். மேல் நீதிமன்ற நிதிபதி மா.இளஞ்செழியன் மீதான தாக்குதலைக் கண்டித்து, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம் இன்று தங்களது கண்டனத்தினை தெரிவித்து கவனயீர்பில் ஈடுபட்டனர். கடமையைப் பகிஷ்கரித்து, மாவட்ட நீதிமன்றத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த சட்டத்தரணிகள், “ஆயுதமுனையில் நீதியை தடுக்க நினைக்காதே”, “நீதித்துறைக்கும் நீதிபதிகளுக்கும் பாதுகாப்பு வேண்டும்“ போன்ற பல்வேறு சுலோகங்களையும் தாங்கியவாறு அமைதியான முறையில் தங்களது எதிர்ப்பை வெளியிட்டனர். நீதிபதியின் மீதான தாக்குதல் நீதிக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக அமைந்துள்ளதுடன் குற்றவாளிகள் உடன் தண்டிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படவேண்டும் எனவும் அவர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை இலக்குவைத்து நல்லூரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து, மட்டக்களப்பு நீதிமன்றங்களில் பணிபுரியும் சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்தோடு, நீதிமன்றின் முன்னல் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து கல்முனை நீதிமன்றங்களில் பணியாற்றும் சட்டத்தரணிகள் இன்று பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதன் காரணமாக கல்முனையில் உள்ள நீதவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றம் போன்றவற்றில் நீதிமன்ற செயற்பாடுகள் இடம்பெறவில்லை.

நீதிபதி மீதான துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்தும், சட்டத்துறைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தலைக் கண்டித்தும் வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் இன்ற பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். இந்த பணிப் புறக்கணிப்பின் போது சட்டத்தரணிகள் தமது வாயை கறுப்புத் துணிகளால் கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேவேளை, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து, யாழ். மையப் பேருந்து நிலையத்தில் இன்று காலை சமூக ஆர்வலர்கள் கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

நல்லூரில் கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பலியான உப பொலிஸ் பரிசோதகர் சரத் ஹேமச்சந்திரவுக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. கைலாசபதி அரங்கில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் மாணவர்கள் கலந்துகோண்டு தீபமேற்றி அஞ்சலி செலுத்தினர்.