புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

செவ்வாய், ஜூலை 11, 2017

யாழ். வலயம் சம்பியனானது

வடமா­கா­ணப் பாட­சா­லை­ க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் ஒட்­டு­மொத்­தப் புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் யாழ்ப்­பா­ணக் கல்வி வல­யம் கிண்­ணம் வென்­றது.

வட­மா­கா­ணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான 10ஆவது தட­க­ளத் தொடர் யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் கடந்த வியா­ழக்­கி­ழமை ஆரம்­பித்து நேற்று வரை நடை­பெற்­றது.

ஒட்­டு­மொத்­தப் புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் 650 புள்­ளி­க­ளைப் பெற்று யாழ்ப்­பாணக் கல்வி வல­யம் கிண்­ணம் வென்­றது.

மன்­னார் கல்வி வல­யம் 601 புள்­ளி­க­ளைப் பெற்று இரண்­டா­வது இடத்­தில் உள்­ளது. வலி­கா­மம் கல்வி வல­யம் 545 புள்­ளி­க­ளைப் பெற்று மூன்­றா­வது இடத்­தில் உள்­ளது.

இந்த மூன்று வல­யங்­க­ளுமே 500 இற்­கும் மேல் புள்­ளி­க­ளைப் பெற்ற வல­யங்­க­ளா­கும். வட­ம­ராட்சி கல்வி வல­யம் 346 புள்­ளி­க­ளு­டன் நான்­கா­வது இடத்­தி­லும், வவு­னியா தெற்கு கல்வி வல­யம் 228 புள்­ளி­க­ளு­டன் ஐந்­தா­வது இடத்­தி­லும் உள்­ளன.

கிளி­நொச்சி கல்வி வல­யம் 190 புள்­ளி­க­ளு­டன் 6ஆவது இடத்­தி­லும், முல்­லைத்­தீவு கல்வி வல­யம் 188 புள்­ளி­க­ளு­டன் ஏழா­வது இடத்­தி­லும், தென்­ம­ராட்சி கல்வி வல­யம் 157 புள்­ளி­க­ளு­டன் எட்­டா­வது இடத்­தி­லும், மடு கல்வி வல­யம் 130 புள்­ளி­க­ளு­டன் ஒன்­ப­தா­வது இடத்­தி­லும், துணுக்­காய் கல்வி வல­யம் 109 புள்­ளி­க­ளு­டன் பத்­தா­வது இடத்­தி­லும் உள்­ளன. அடுத்த இரு இடங்­க­ளி­லும் முறையே தீவ­கம், வவு­னியா வடக்கு ஆகிய கல்வி வல­யங்­கள் உள்­ளன.