www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

திங்கள், ஜூலை 24, 2017

யங்ஹென்றிஸ் – ஐயனார் இறுதியில் இன்று மோதல்

வலி­கா­மம் கால்­பந்­தாட்ட லீக்­கி­னால் நடத்­தப்­ப­டும் ‘உத­யன்
செய்­தி­யா­ளர்’ நா.நவ­ரட்ண­ராசா ஞாப­கார்த்­தக் கிண்­ணத்­துக்­கான கால்­பந்­தாட்­டத் தொட­ரின் இறு­தி­யாட்­டத்­தில் இள­வாலை யங்­ஹென்­றிஸ் அணி வேலணை துறை­யூர் ஐய­னார் அணி­ என்­பன இறு­தி­யாட்­டத்­தில் இன்று மோத­வுள்­ளன.
யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் இரவு 8.30 மணிக்கு இந்த இறு­தி­யாட்­டம் நடை­பெ­ற­வுள்­ளது.
யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இரவு 7 மணிக்கு இடம்­பெற்ற இரண்­டா­வது அரை­யி­றுதி ஆட்­டத்­தில் ஊரெழு றோயல் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து இள­வாலை யங்­ஹென்­றிஸ் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது.
முதல் பாதி­யாட்­டத்­தின் 3ஆவது நிமி­டத்­தில் ஊரெழு றோயல் அணிக்­கான முத­லா­வது கோல் பிர­சன்­னா­வால் பதி­வா­னது.
ஆட்­டத்­தின் 9ஆவது நிமி­டத்­தில் இள­வாலை யங்­ஹென்­றிஸ் அணிக்­கான முத­லா­வது கோல் ஞான­றூ­ப­னா­லும், இரண்­டா­வது கோல் 45ஆவது நிமி­டத்­தில தனே­சி­னா­லும் பதி­வாக முதுல் பாதி­யின் முடி­வில் இள­வாலை யங்­ஹென்­றிஸ் அணி 2:1 என்ற கோல் கணக்­கில் முன்­னிலை பெற்­றது.
இரண்­டாம் பாதி­யில் ஊரெழு றோயல் அணிக்­கான இரண்­டா­வது கோல் சயந்­த­னால் பதிவு செய்­யப்­பட்­டது.
நிர்­ண­யிக்­கப்­பட்ட நிமி­டங்­க­ளின் நிறை­வில் இரு அணி­க­ளும் தலா இரண்டு கோல்­க­ளைப் பதி­வு­செய்­த­மை­யால் சம­நி­லைத் தவிர்ப்பு உதை­க­ளில் வெற்­றி­யைத் தீர்­மா­னிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.
முடி­வில் 3:2 என்ற கோல் கணக்­கில் இள­வாலை யங்­ஹென்­றிஸ் அணி வெற்­றி­பெற்று இறு­தி­யாட்­டத்­துக்­குத் தகுதி பெற்­றது.
இன்று இரவு 7 மணிக்கு இடம்­பெ­றும் மூன்­றாம் இடத்­துக்­கான ஆட்­டத்­தில் அராலி அண்ணா விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து இள­வாலை சென். லூட்ஸ் விளை­யாட்­டுக் கழக அணி மோத­வுள்­ளது.