தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

புதன், ஜூலை 12, 2017

லண்டனில் வெடித்து எரிந்த வான் - அளவெட்டியைச் சேர்ந்த வர்த்தகர் கருகி மரணம்

லண்டனில் நேற்றுமுன்தினம் இரவு வான் ஒன்றில் தீடிரென ஏற்பட்ட தீயில் கருகி, இலங்கை தமிழரான வர்த்தகர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த லண்டன் தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போதும் வாகனத்தின் உள்ளே இருந்த நபரை காப்பாற்ற முடியவில்லை என கூறப்படுகின்றது.
லண்டனில் நேற்றுமுன்தினம் இரவு வான் ஒன்றில் தீடிரென ஏற்பட்ட தீயில் கருகி, இலங்கை தமிழரான வர்த்தகர் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த லண்டன் தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போதும் வாகனத்தின் உள்ளே இருந்த நபரை காப்பாற்ற முடியவில்லை என கூறப்படுகின்றது.

தீ விபத்தில் யாழ்ப்பாணம் அளவெட்டியை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ் என்ற வர்த்தகரே உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்