புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

ஞாயிறு, ஜூலை 09, 2017

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவோம்! - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

ஒக்ரோபரில் நடக்கவிருக்கும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போட்டியிட உள்ளதாக அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் தங்குமிட வளாகம் ஒன்றில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கேள்வி பதில் கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

ஒக்ரோபரில் நடக்கவிருக்கும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போட்டியிட உள்ளதாக அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் தங்குமிட வளாகம் ஒன்றில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கேள்வி பதில் கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

'வடக்கு மகாணசபைத் தேர்தல் நடைபெற முன்னர் சிவில் சமூக அமையத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்குமிடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றிருந்தது. அங்கு மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடவேண்டாம். அது கொள்கைகளுக்கு முரண்பாடாப அமையும் எனக் கூறினோம். நாங்கள் போட்டியிடாதுவிட்டால் அரச ஆதரவுபெற்ற டக்ளஸ் தேவானந்தா மாகாணசபையைக் கைப்பற்ற வாய்ப்பாகிவிடும். அவர் வந்தால் மாகாணசபை ஊடாக ஏதோ பெரிதாக செய்யமுடியும் என ஒரு மாயையை வெளி உலகத்திற்கு இந்த அரசாங்கம் காட்டிவிடும் எனவே போட்டியிடவேண்டும் என கூட்டமைப்பினர் கூறினார்கள்.

அப்போது நாம் மாகாணசபை முறையை ஏற்கமாட்டோம் எனும் வாசகத்தையாவது விஞ்ஞாபனத்தில் முன்வையுங்கள் என்றோம் அவர்கள் அதையும் ஏற்கவில்லை. ஆனால் தற்போது என்ன நோக்கத்திற்காக தாங்கள் போட்டியிடுகின்றோம் எனக் கூறி போட்டியிட்டார்களோ அதிலிருந்து அவர்கள் விலகிவிட்டார்கள்.

தற்போது அவர்கள் அரசுடன் இணைந்து மாகாணசபையால் எல்லாம் செய்யமுடியும் என்ற ஒரு மாயையை உருவாக்குகிறார்கள். இதனை தஅம்பலப்படுத்தவேண்டும் என்றால் நாங்களும் களமிறங்கவேண்டிய ஒரு தேவை இருக்கிறது. எனவே கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடப்போகின்றோம். என்றார்.

அதேவேளை, தனித்துப் போட்டியிடுவதா கூட்டணி ஒன்றினை அமைத்துப் போட்டியிடுவதா என்பது தொடர்பில் இன்னமும் முடிவாகவில்லை எனத் தெரிவித்த கட்சியின்செயலாளர் கஜேந்திரன் அவர் அது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதாக குறிப்பிட்டுள்ளார்.