www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வியாழன், ஜூலை 20, 2017

பதவியை ராஜினாமா செய்தார் ஆளும்கட்சி எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம்

டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் திடீரென தனது சட்டமன்ற அவைக்குழு பொறுப்பை இன்று ராஜினாமா செய்துள்ளார். வெங்கடாசலத்தின் இந்த முடிவு கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம். இவர் ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினராவார். அதிமுக பன்னீர்செல்வம்- சசிகலா அணி என இரண்டாகப் பிரிந்தபோது சசிகலா அணியில் சேர்ந்தார். சசிகலா சிறைக்குச் சென்ற பின்னர் பழனிசாமி முதல்வரானார். இந்த நிலையில், டி.டி.வி.தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கிவைப்பதாக பழனிசாமி அணியினர் அறிவித்தனர். இதையடுத்து, "ஏற்கெனவே கட்சியிலிருந்து ஒதுங்கிவிட்டாக" அறிவித்தார் டி.டி.வி.தினகரன்.

இதனிடையே, இரட்டை இலைச் சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு மாத சிறைக்குப் பின்னர் ஜாமீனில் வந்த தினகரனுக்கு அவரது ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்டவர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து கட்சிப்பணியைத் தொடரப்போவதாக அறிவித்து கட்சிக்குள் மீண்டும் பரப்பபை ஏற்படுத்தினார் தினகரன்.

இதனிடையே, முதல்வர் பழனிசாமியை சந்தித்து பழனியப்பன், செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாசலம் ஆகியோர் அமைச்சர் பதவிகேட்டு வலியுறுத்தியதாகக் கூறப்பட்டது. ஆனால், இவர்களின் கோரிக்கையை முதல்வர் பழனிசாமி நிராகரித்துவிட்டார். இதனால் அதிருப்தியில் இருந்து வந்தனர் இவர்கள் மூன்று பேரும். இந்த நிலையில், சட்டமன்ற அவைக்குழு பொறுப்பை தோப்பு வெங்கடாசலம் இன்று திடீரென ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை சட்டமன்ற செயலாளருக்கு அவர் அனுப்பியுள்ளார். ஆளும் கட்சியைச் சேர்ந்த அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது கட்சிக்குள்