வெள்ளி, ஜூலை 14, 2017

மாற்­றுத் தலைமை குறித்­துப் பேச ஈபி­ஆர்­எல்­எவ்­வுக்கு தகுதி உண்டா? சர­வ­ண­ப­வன் எம்.பி. காட்­டம்

அர­சி­யல் தலை­மை­யைக் குறை­கூ­று­வ­தற்­கும் மாற்­றுத் தலைமை பற்­றிப் பேசு­வ­தற்­கும் ஈபி­ஆர் எல்­எவ் கட்­சிக்கோ அதன்
நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­த­னுக்கோ வர­லாற்­றில் எந்­தத் தகு­தி­யா­வது இருக்­கி­றதா?
இவ்­வாறு காட்­ட­மா­கக் கேள்வி எழுப்­பி­யி­ருக்­கி­றார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் யாழ்ப்­பா­ணம், கிளி­நொச்சி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன்.
கூட்­ட­மைப்­பின் மற்­றொரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான சிவ­சக்தி ஆனந்­தன் மாற்­றுத் தலைமை குறித்து அண்­மை­யில் தெரி­வித்த கருத்­தைக் கண்­டித்து விடுத்த அறிக்­கை­யில் அவர் கொந்­த­ளிக்­கும் வாதங்­களை முன்­வைத்­துள்­ளார்.
அவ­ரது ஊடக அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பிற்கு மாற்­றான தலைமை ஒன்று பற்­றிச் சிந்­திக்க வேண்­டிய காலம் வந்­துள்­ளது என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன் அண்­மை­யில் தெரி­வித்­தி­ருக்­கி­றார். கூட்­ட­மைப்­புக்­குள் இருந்­து­கொண்டே அவர் இத­னைத் தெரி­வித்­தி­ருக்­கி­றார். அவ­ருக்கோ அல்­லது அவ­ரது கட்­சிக்கோ கூட்­ட­மைப்­பின் தலை­மை­யு­டன் முரண்­பா­டு­கள் இருந்­தால் அத­னைக் கூட்­ட­மைப்­புக்­குள்­ளேயே பேசித் தீர்த்­துக்­கொள்­ள­வேண்­டும். அது­தான் கூட்­டணி தர்­மம்.
அது முடி­ய­வில்லை என்­றால் கூட்­ட­மைப்­பை­விட்டு அவ­ரும் அவ­ரது கட்­சி­யும் வெளி­யே­றிச் சென்று மாற்­றுத் தலைமை குறித்­துப் பேச­வேண்­டும். அதைச் செய்­யும் துணிவு அவர்­க­ளுக்கு ஒரு­போ­தும் கிடை­யாது. அவர்­கள் அப்­ப­டிச் செய்­ய­வும் மாட்­டார்­கள். உள்ளே இருந்­து­கொண்டே கல­கக் குரல் எழுப்­பு­வ­தன் ஊடா­கத் தமது நலன்­க­ளைத் தேடிக்­கொள்­வதே அவர்­க­ளின் அரு­வ­ருக்­கத்­தக்க பாணி.
சிவ­சக்தி ஆனந்­தனோ ஈபி­ஆர்­எல்­எவ் கட்­சியோ இவ்­வாறு சபை­கு­ழப்­பித் தனத்­து­டன் நடந்து கொள்­வது இன்று நேற்று நடப்­ப­தல்ல. அவர்­க­ளின் வர­லாறு முழு­வ­தும் அதைத்­தான் அவர்­கள் செய்து வந்­தி­ருக்­கி­றார்­கள். அவர்­க­ளின் கட்சி வர­லாற்றை நன்கு உற்­றுப் பாருங்­கள் அது புரி­யும்.
அவர்­கள் தமிழ் மக்­க­ளின் விடு­த­லைக்­காக என்று ஆயு­தம் தூக்­கி­னார்­கள். பின்­னர் எந்த மக்­க­ளுக்­காக ஆயு­தங்­க­ளைத் தூக்­கி­னார்­களோ அவர்­க­ளையே சுட்­டுக்­கொன்று ‘மண்­டை­யன் குழு’ என்று பெயர் வாங்­கி­னார்­கள். அந்த மக்­க­ளையே கடத்­தி­னார்­கள், அவர்­க­ளி­டமே கொள்­ளை­ய­டித்­தார்­கள். இவை­யெல்­லாம் விடு­த­லைக்­குத் தேவை­யா­னவை என்று சப்­பைக்­கட்­டுக் கட்­டி­னார்­கள்.
அதா­வது எல்­லாத் தமிழ் இளை­ஞர்­க­ளும் மக்­க­ளுக்­கா­கப் போரா­டப்­பு­றப்­பட்­ட­போது தாமும் அதி­கா­ரங்­க­ளைப் பெற­வேண்­டும் என்­கிற சுய­ந­லத்­து­டன் ஆயு­தங்­க­ளைத் தூக்­கி­னார்­கள். அத­னால்­தான் அந்த ஆயு­தங்­க­ளைத் தமது மக்­க­ளுக்கு எதி­ரா­கவே பயன்­ப­டுத்தி அதி­கா­ரத்தை நிலை­நி­றுத்­தி­னார்­கள். அவர்­க­ளுக்­குத் தேவை­யாக இருந்­தது எல்­லாம் அவர்­க­ளின் சுய­ந­லத்தை நிறை­வேற்­றிக்­கொள்­வது மட்­டுமே.
அது போகட்­டும், கட்­சிக்­குள்ளே அவர்­கள் என்ன செய்­தார்­கள். ஈபி­ஆர்­எல்­எவ் கட்­சிக்­குள் இருந்த மூத்த தலை­வர்­கள் உட்­கட்சி மோதல்­க­ளா­லும் சகோ­த­ரப் படு­கொ­லை­க­ளா­லும் அழிக்­கப்­பட்­ட­போது தங்­க­ளைப் பாது­காத்­துக்­கொண்­டார்­கள். சிவ­சக்தி ஆனந்­த­னும் அவ­ரது தலை­வர் சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ர­னும் தரு­ணம் வந்­த­போது தலை­மைப் பத­வி­க­ளைக் கைப்­பற்­றிக்­கொண்­டார்­கள். ஆக கட்­சிக்­குள்­ளும் அவர்­க­ளின் குறி­யாக இருந்­தது தமது சுய­ந­லனை நிறை­வேற்­றிக்­கொள்­ளும் திட்­டம் மட்­டுமே.
அதன் பின்­னர் எந்த மக்­க­ளின் விடு­த­லைக்கு என்று புறப்­பட்­டார்­களோ அந்த மக்­களை நட்­டாற்­றில் கைவிட்­டு­விட்டு இந்­தி­யா­வின் பின்­னால் சென்­றார்­கள். ஏன்? இந்­தி­யா­வி­ட­மி­ருந்து நலன்­க­ளை­யும் பணத்­தை­யும் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக. அந்­தப் பருப்பு இனி­மேல் வேகாது என்று தெரிந்­த­போது இலங்­கைக்கு ஓடி­வந்து கொழும்பு அர­சு­டன் சேர்ந்­து­கொண்­டார்­கள். சிங்­கள அர­சு­க­ளி­டம் இருந்து நலன்­க­ளைப் பெற்­றுக்­கொள்­வதை உறு­திப்­ப­டுத்­த­திக்­கொண்­டார்­கள். அதற்­கா­கத் தமிழ் மக்­க­ளை­யும் அவர்­க­ளின் ஒரே போராட்ட இயக்­க­மாக இருந்த விடு­த­லைப் புலி­க­ளை­யும் காட்­டிக்­கொ­டுப்­ப­தற்­கும் அவர்­கள் தயங்­க­வில்லை.
அப்­போ­தும் விடு­த­லைப் புலி­க­ளுக்­க◌ான மாற்று இயக்­கம் என்­று­தான் இவர்­கள் கூறிக்­கொண்­டார்­கள். எந்த தமிழ் மக்­க­ளுக்­கா­கப் போரா­டப் புறப்­பட்­டார்­களோ அதைக் கைவிட்டு, தமது நோக்­கத்­தைத் தூக்கி எறிந்­து­விட்டு, தமிழ் மக்­க­ளுக்­கா­கப் போரா­டிய இயக்­கத்­துக்கு மாற்று இயக்­கம் என்­றார்­கள். அதன் பய­னாக அவர்­க­ளுக்­குச் சிங்­கள அரசு அமைச்­சில் ஒரு பத­வி­யைக் கொடுத்­தது. பெற்­றுக்­கொண்டு பய­ன­டைந்­தார்­கள். அதா­வது அவர்­கள் உயர்த்­திய மாற்­றுக் குரல் அவர்­க­ளுக்கு ஓர் வரு­மா­னம் தரக்­கூ­டிய பதவி கிடைத்­தது.
வடக்கு மாகாண சபை­யி­லும் அது­வே­தான் நடந்­தது. அவர்­கள் மாற்­றுக் கட்சி, மாற்­றுத் தலைமை என்று குரல் எழுப்பி ஒரு­வாறு அமைச்­சுப் பத­வி­யைப் பெற்­றுக்­கொண்டு விட்­டார்­கள். சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ர­னின் தம்பி இப்­போது அமைச்­ச­ரா­கி­விட்­டார். அவர்­கள் மாற்று அணி எனக் கிளம்­பி­ய­தன் பயனை அடைந்­து­விட்­டார்­கள்.
இப்­ப­டி­யே­தான் வர­லாறு முழு­மைக்­குமே அவர்­கள் நடந்­து­கொண்­டார்­கள். ஒரு கொள்கை அணி­யில் சேர்­வ­தும் பின்­னர் தங்­கள் நல­னுக்­கா­கப் பிரி­வ­தும், அதன் பின்­னர் தாம் முன்­னர் கொண்ட கொள்­கைக்கு முற்­றி­லும் முர­ணான பாதை­யில் பய­ணிப்­ப­து­டன் அது­தான் மாற்று என்று சொல்­வ­தும் அதற்­கூ­டா­கத் தங்­கள் சுய­ந­லன்­க­ளைப் பூர்த்தி செய்­து­கொள்­வ­தும் அவர்­க­ளின் வாடிக்கை, வழமை.
அதை­யே­தான் இப்­போ­தும் செய்­கி­றார்­கள். தமிழ் மக்­கள் இத­னைச் சரி­யா­கப் புரிந்­து­கொள்ள வேண்­டும்.
ஈபி­ஆர்­எல்­எவ் கட்­சி­யும் சிவ­சக்தி ஆனந்­த­னும் மாற்­றுத் தலைமை என்று கேட்­ப­தும் மாற்று அணி என்று பேசு­வ­தும் தமிழ் மக்­க­ளின் மீதுள்ள அக்­க­றை­யின் கார­ண­மாக அல்ல என்­பதை விளங்­கிக்­கொள்­ள­வேண்­டும். தமக்­குத் தேவை­யா­ன­வற்றை, தமது நலன்­களை நிறை­வேற்­றிக்­கொள்­வ­தற்­கா­கவே அவர்­கள் இப்­ப­டித் தகி­டு­தத்­தம் ஆடு­கி­றார்­கள்.
இன்­னும் சொல்­லப்­போ­னால், நாளைக்கு கொழும்பு அர­சில் அமைச்­சுப் பதவி கிடைக்­கும் என்­றால் அத­னை­யும் பெற்­றுக்­கொண்டு அது­தான் மாற்று அணி, மாற்­றுத் தலைமை என்று அவர்­கள் தமி­ழர்­களை முட்­டாள்­க­ளாக்க முயல்­வார்­கள்.
எனவே தமிழ் மக்­கள் இது தொடர்­பில் விழிப்­பு­டன் இருந்து, இவ்­வாறு மாற்­றுத் தலைமை, மாற்று அணி என்று பேசு­ப­வர்­க­ளின் தலை­யில் இறுக்­கிக் குட்டி அவர்­க­ளைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­குள் அடக்க ஒடுக்­க­மாக இருக்­கச் செய்­ய­வேண்­டும். இல்­லை­யேல் அவர்­கள் தமிழ் மக்­க­ளின் தலை­யில் மிள­காய் அரைத்­து­விட்டு தங்­கள் நலன்­க­ளைப் பார்த்­துக்­கொண்டு போய்­வி­டு­வார்­கள்.
ஈபி­ஆர்­எல்­எவ் கட்சி மாற்று அணி பற்­றிப் பேசியே மாகாண அமைச்­சுப் பதவி ஒன்­றைப் பெற்­றுக்­கொண்­ட­போ­தும் அது போத­வில்­லைப் போலுள்­ளது. அத­னால்­தான் சிவ­சக்தி ஆனந்­தன் மீண்­டும் மாற்­றுத் தலைமை பற்­றிப் பேச முனைந்­தி­ருக்­கி­றார். அது பற்றி மக்­கள் விழிப்­பு­டன் இருக்­க­வேண்­டும். – என்றுள்ளது.