தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வியாழன், ஜூலை 13, 2017

அனுராதபுர இராணுவ முகாமில் இருந்து ஆயுதங்கள் கொள்ளை

அநுராதபுரம், கலத்தேவ பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தின் கவசப் படைப்பிரிவிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையிலிருந்து
, ஆயுதங்கள் சில மாயமாகியுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த முகாம் அதிகாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, அநுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தின் குற்ற விசாரணைப் பிரிவினர் மற்றும் பொலிஸ் மோப்பநாய்ப் பிரிவினர் இணைந்து, இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அநுராதபுரம், கலத்தேவ பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தின் கவசப் படைப்பிரிவிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையிலிருந்து, ஆயுதங்கள் சில மாயமாகியுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த முகாம் அதிகாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, அநுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தின் குற்ற விசாரணைப் பிரிவினர் மற்றும் பொலிஸ் மோப்பநாய்ப் பிரிவினர் இணைந்து, இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த முகாமின் கட்டளையதிகாரின் ஆணைப் பிரகாரம், முகாமைவிட்டு எந்தவொரு வீரரோ அல்லது அதிகாரியோ வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முகாமின் ஆயுதக் களஞ்சியசாலைக் கதவை உடைத்து, அங்கிருந்த இரு துப்பாக்கிகள் களாவாடப்பட்டுள்ளன என்று, இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், துப்பாக்கித் தோட்டாக்கள் எவையும் காணாமற்போகவில்லை என்றும், கடந்த மாதம் 28ஆம் திகதியன்றே, குறித்த முகாமிலிருந்து இறுதியாக ஆயுதங்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.