ஞாயிறு, ஜூலை 23, 2017

சூடு நடத்தியவர் தப்பியோடிய மோட்டார் சைக்கிள் மீட்பு

சூடு நடத்தியவர் தப்பியோடிய மோட்டார் சைக்கிள் மீட்புப்பாக்கிச் சூடு நடத்தியவர் தப்பியோடப் பயன்படுத்தப்பட்டது என்று
கூறப்படும் மோட்டார் சைக்கிள் (NP-HX 2005)அரியாலைப் பகுதியில் இன்று மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை நல்லூர் ஆலயப் பின் வீதி வழியாகப் பயணித்த மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் வாகனத்தை இடைமறித்து இனந்தெரியாத நபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார்.

அதில் மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் படுகாயமடைந்தனர். அவர்களில் ஒருவர் நேற்று இரவு 11 மணியளவில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.