திங்கள், ஜூலை 24, 2017

சுட்டவருக்கும் சுவிஸ் குமாருக்கும் தொடர்பு? - கொழும்பு ஊடகம் தகவல்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் பிரதான சந்தேகநபரான சுவிஸ் குமாருக்கும், நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாக கூறப்படும் நபருக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள இருவரிடமும், பிரதான சந்தேகநபரை கைது செய்யும் நோக்கில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதான சந்தேகநபரின் உறவினர் ஒருவரும், நண்பர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

வித்தியா படுகொலை வழக்கில் தடுப்பு காவலில் உள்ள சுவிஸ் குமாருக்கும், நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படும் பிரதான சந்தேகநபருக்கும் இடையில் நெருக்கமான தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்கு குற்றவியல் புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாகவே, நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.