ஞாயிறு, ஜூலை 09, 2017

பொலிசாரின் சூட்டில் ஒருவர் பலி! - வடமராட்சி கிழக்கில் பதற்றம்


 வடமராட்சி கிழக்குப் பகுதியில் இன்று பிற்பகல் பொலிசாரின்  துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.  உயிரிழந்தவர் 24 வயதுடைய இளைஞன்  என தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் சடலம் தற்போது மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்குப் பகுதியில் இன்று பிற்பகல் பொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது
. உயிரிழந்தவர் 24 வயதுடைய இளைஞன் என தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் சடலம் தற்போது மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை அடுத்து குறித்த பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பொலிசாரின் வாகனம் மீது பொது மக்கள் கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமான முறையில் மணல் ஏற்றி வந்தவர்களை இடை மறித்த போது நிற்காததன் காரணமாகவே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.