தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

செவ்வாய், ஜூலை 25, 2017

சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீது நல்லூரில் துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற நபரின் நண்பர்கள் இருவரையும் 48 மணித்தியாலங்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள யாழ்.நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 22ம் திகதி மாலை 5.10 மணியளவில் நல்லூர் பகுதியில் நீதிபதி மா.இளஞ்செழியன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முயற்சி செய்த போது, நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்தார்.
மற்றைய பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்தார்.
மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீது நல்லூரில் துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற நபரின் நண்பர்கள் இருவரையும் 48 மணித்தியாலங்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள யாழ்.நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த 22ம் திகதி மாலை 5.10 மணியளவில் நல்லூர் பகுதியில் நீதிபதி மா.இளஞ்செழியன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முயற்சி செய்த போது, நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்தார். மற்றைய பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்தார்.

பின்னர், துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டமுன்னாள் போராளியான அஜந்தனுடன் மது அருந்திய அவரின் நண்பர்களான செல்வராசா மகிந்தன் மற்றும் பாலசிங்கம் மகேந்திர ராசா ஆகிய இருவரும் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்றுமுன்தினம் இரவு யாழ்ப்பாணம் பொலிஸார் யாழ்.நீதிமன்ற நீதிவானின் இல்லத்தில் ஆஜர்ப்படுத்திய போது 48 மணிநேர தடுப்பு காவலில் வைக்குமாறு நீதிபதி உத்திரவிட்டுள்ளார்.