www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

செவ்வாய், ஜூலை 18, 2017

வடமாகாண சபை­யின்எதிர்க்கட்சித் தலைவர் பதவி துறக்கப் போகிறாராம்

வினைத்­தி­றன் அற்ற மாகாண சபை­யின் ஒட்­டு­மொத்த செய­லை­யும் கண்­டிக்­கும் வண்­ணம் எனது எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வியை அன்றி அடிப்­படை உறுப்­பி­னர் பத­வி­யைக்­கூட துறப்­பது தொடர்­பில் விரை­வில் பரி­சீ­லனை செய்­ய­வுள்­ளேன் என்று, வடக்கு மாகாண சபை­யின் எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா விச­னத்­து­டன் தெரி­வித்­தார்.
வினைத்­தி­றன் அற்ற மாகாண சபை­யின் ஒட்­டு­மொத்த செய­லை­யும் கண்­டிக்­கும் வண்­ணம் எனது எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வியை அன்றி அடிப்­படை உறுப்­பி­னர் பத­வி­யைக்­கூட துறப்­பது தொடர்­பில் விரை­வில் பரி­சீ­லனை செய்­ய­வுள்­ளேன் என்று, வடக்கு மாகாண சபை­யின் எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா விச­னத்­து­டன் தெரி­வித்­தார்.

வடக்கு மாகாண சபை­யின் அமைச்­சர்­கள் நிய­ம­னம் மற்­றும் தற்­போது அத­னோடு ஒட்டி நடை­பெ­றும் விட­யங்­கள் தொடர்­பில் கருத்­துக் கூறு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

ஆளும் கட்­சி­யின் உள் முரண்­பாடே தற்­போது பேசு பொரு­ளா­க­வுள்­ளது. அவ்­வாறு எழும் முரண்­பா­டு­க­ளைத் தீர்ப்­ப­தற்கே ஆளும் கட்­சிக்கு நேரம் போதா­மல் உள்­ளது. மக்­க­ளுக்­கான எந்­தப் பணி­யும் இடம்­பெ­ற­வில்லை.இதே­நே­ரம் அறு­திப் பெரும்­பான்­மை­யோடு இருந்த முத­ல­மைச்­சரோ இன்று பெரும்­பான்மை இல்­லாத தொங்கு கட்சி போன்ற நிலை­யில் சக­ல­ரின் இழுப்­புக்­கும் ஆளா­கி­யுள்­ளார். மாகாண சபை­யின் 5 அமைச்­சர்­க­ளில. தற்­போது ஒரே மாவட்­டத்­தில் 3 அமைச்­சர்­கள் உள்­ள­னர். இந்த நிலை­யில் 4 ஆவது அமைச்­ச­ரும் யாழ்ப்­பா­ணத்­தி­லேயே நிய­மிக்­கும் வாய்ப்­புத் தென்­ப­டு­கின்­றது. அவ்­வாறு நிய­மிக்க முடி­யாது என்று சட்­டம் கூற­வில்லை.

இருப்­பி­னும் சன­நா­யக முறைப்­படி ஏனைய மாவட்­டங்­க­ளும் உள்­வாங்­கப்­ப­ட­வேண்­டும். இல்­லை­யேல் அது யாழ்ப்­பாண மேலா­திக்­கம் என்ற பழிச் சொல்­லுக்கு ஆளா­குமோ என்ற அச்­சம் உள்­ளது. அத­னை­யும் இந்த வினைத்­தி­றன் அற்ற மாகாண சபை­யின் ஒட்­டு­மொத்த செய­லை­யும் கண்­டிக்­கும் வண்­ணம் எனது எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வியை அன்றி அடிப்­படை உறுப்­பி­னர் பத­வி­யைக்­கூட துறப்­பது தொடர்­பில் விரை­வில் பரி­சீ­லனை செய்­ய­வுள்­ளேன். இன்­றைய நிலை­யில் ஓர் சீரான முறை­யில் மாகாண சபையை இனி முத­ல­மைச்­சர் கொண்டு செல்­வார் என்று நான் நம்­ப­வில்லை – என்­று தெரிவித்துள்ளார்.