புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வியாழன், ஜூலை 06, 2017

மகாநாயக்கர்களே சட்டத்தை தீர்மானிப்பார்களாயின் நாடாளுமன்றம் எதற்கு? - சுமந்திரன் கேள்வி

நாட்டில் என்ன நடக்கவேண்டுமென நான்கு பேர் இணைந்து சட்டம் இயற்றக்கூடிய நிலை இருக்குமென்றால் நாடாளுமன்றம் எதற்கு? என நாடாளுமன்றத்தில் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்
நாட்டில் என்ன நடக்கவேண்டுமென நான்கு பேர் இணைந்து சட்டம் இயற்றக்கூடிய நிலை இருக்குமென்றால் நாடாளுமன்றம் எதற்கு? என நாடாளுமன்றத்தில் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்

நாட்டிற்கு புதிய அரசியலமைப்பொன்று அவசியமில்லையென்றும், பலவந்தமாக காணாமல்போகச் செய்வதிலிருந்து ஆட்களை பாதுகாக்கும் சர்வதேச சமவாய சட்டமூலம் அவசியமில்லை என்றும், மகாநாயக்கர்கள் தீர்மானம் எடுத்துள்ளமை தொடர்பாகவே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற, கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த சட்டமூலம் நேற்றைய தினம் விவாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், நேற்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், சமய தலைவர்கள் விடுத்த வேண்டுகோளின் பின்னர் அரசாங்கம் பின்வாங்கியுள்ளதென்ற சந்தேகம் தமிழ் மக்களிடையே எழுந்துள்ளதாகவும், அவ்வாறு இருக்கக் கூடாதென்றும் குறிப்பிட்டார். நாட்டில் நாடாளுமன்றமே முதன்மையானதாக இருக்கும் நிலையில், அதற்கு மேலாக எந்தவொரு சபையும் இருக்க முடியாதென தெரிவித்த சுமந்திரன், 70 வருட காலமாக தீர்க்க முடியாமல் இருந்த பிரச்சினைகளை ஓரிரு வருடங்களுக்குள் தீர்க்க முற்படும்போது இடையூறுகள் ஏற்பட்டாலும் அரசாங்கம் துணிவுடன் செயற்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

மேலும், தீர்வை நோக்கிய கடந்த ஒன்றரை வருட கால பயணத்தில், புதிய அரசியலமைப்பு தொடர்பாக பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு பல முன்னேற்றகரமான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், அரசமைப்பு தயாரிப்பு பணி தோல்வியடையுமாயின் நாட்டின் நல்லிணக்கம் தோல்வியடைந்ததாகவே கருதப்பட்டு, அது சரித்திரத்தில் எழுதப்பட்டுவிடும் என்று சுமந்திரன் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், அரசாங்கம் முன்வைத்த காலை பின்வைக்காமல், புறமுதுகு காட்டி ஓடாமல், துணிவுடன் செயற்பட்டு, மக்கள் ஆணைக்கு அமைவாக உருவாக்கி, நாட்டில் சுபீட்சத்தை ஏற்படுத்த வேண்டுமென சுமந்திரன் கேட்டுக்கொண்டார்.