www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

செவ்வாய், ஜூலை 18, 2017

தமிழரசுக் கட்சிக்கு தாவவில்லை! - மறுக்கிறார் டெனீஸ்வரன்

நான் தமிழரசுக்கட்சிக்கு தாவியுள்ளதாக சில நபர்களால் திட்டமிட்ட வகையில் பரப்பப்படுவதாக வடமாகாண போக்குவரத்து அமைச்சர் ப.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியில் இணையவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து அமைச்சர் ப.டெனீஸ்வரனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நான் தமிழரசுக்கட்சிக்கு தாவியுள்ளதாக சில நபர்களால் திட்டமிட்ட வகையில் பரப்பப்படுவதாக வடமாகாண போக்குவரத்து அமைச்சர் ப.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியில் இணையவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து அமைச்சர் ப.டெனீஸ்வரனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“தமிழரசுக்கட்சிக்கு தாவியுள்ளதாக வெளியாகும் தகவல்கள் இப்பொழுதல்ல, ஒருசில நபர்கள் திட்டமிட்ட வகையில் சேறு பூசவேண்டும் என்று செயற்படுகையில் நிச்சயமாக மக்களுக்கு எனது கருத்தைக் கூறவேண்டும். ஒரு தடவை மன்னார் மாவட்டத்தில் குஞ்சுக்குளம் பகுதியில் இருக்கின்ற மக்கள் வெள்ளப்பெருக்கினால் பிரதான பாதையில் செல்லமுடியாமல் இரண்டு வாரங்கள் தவித்துக்கொண்டிருந்தபோது, ஆளுநருடன் தொடர்பு கொண்டு உலங்குவானூர்தி ஊடாக அந்தப்பகுதிக்குப் பொருட்கள் கொண்டு சென்று மருத்துவ வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. அந்த சமயம் ஒருசில நபர்கள் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து விட்டதாக தகவல்களை வழங்கியிருந்தார்கள்.

அதேநேரம் இரண்டு வருடத்திற்கு முன்னர் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களுடன் இரண்டு மணித்தியாலயங்கள் உரையாடலின் பின்னர் நான் தமிழரசுக்கட்சிக்கு தாவி விட்டதாக செய்தி வெளியாகியது. தற்போது முதலமைச்சருக்கு எதிராக கையெழுத்திட்ட பிறகு தமிழரசுக்கட்சிக்கு தாவி விட்டதாக செய்திகள் வெளியாகின்றன.

உண்மையில் இன்று வரை ரெலோ கட்சியில் இருப்பதால் தான் விளக்கம் கோரியும் இருக்கின்றார்கள். இன்று வரை, இந்த நிமிடம் வரை ரெலோவில் தான் இருக்கின்றேன். கொள்கை ரீதியாக எந்தவொரு கட்சியும் ஜனநாயக விழுமியங்களை மீறி செயற்பட முடியாது. ஜனநாயக விழுமியங்கள் இன்னும் ரெலோவில் இருப்பதாகத்தான் நான் நம்புகின்றேன்.

அவ்வாறான ஜனநாயக விழுமியங்களை மளுங்கடித்து விட்டு அதை ஒழித்துவிட்டு புறமுதுகு குத்துவீர்கள் என்று சொன்னால், கட்சி தாவுவதோ, நடந்து செல்வதோ, ஓடிச் செல்வதோ ஒரு கட்சிக்குச் செல்வதல்ல. முதுகுக்கு பின்னால் குத்துகின்ற நபர் நானல்ல உங்களுடைய முகத்திற்கு நேராகவே சொல்லிவிட்டு எனக்கு என்ன தென்படுகின்றதோ ஜனநாயகம் எங்கு நிலைத்திருக்கின்றதோ அங்கு செல்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.

சில நேரங்களில் சில மாற்று நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய தேவையும் வரலாம். இன்று வரையில் கட்சியில்தான் இருக்கின்றேன். எதிர்காலத்தில் சரியாக நீதியாக நேர்மையாக அந்தக்கட்சி நடக்கவில்லை என்று சொன்னால் என்னுடைய நடவடிக்கையும் தொடரும் ஆகவே தற்பொழுது கட்சியில் தான் இருக்கின்றேன் என்று மேலும் தெரிவித்தார்.