ஞாயிறு, ஜூலை 16, 2017

டெனீஸ்வரனை பதவி நீக்க முதலமைச்சர் முடிவு?

வடக்கு மாகா­ண போக்­கு­வ­ரத்து அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரனை, பதவி நீக்­கம் செய்­வ­தற்கு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளார். வடக்கு மாகாண சபை­யின் விவ­சாய அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­சன் மற்­றும் கல்வி அமைச்­சர் த.குரு­கு­ல­ராசா ஆகி­யோ­ரைப் பதவி நீக்­கி­ய­தால் தோன்­றிய சர்ச்சை அடங்­கு­வ­தற்கு முன்­னரே, இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த 13ஆம் திகதி, தமி­ழீழ விடு­தலை இயக்­கத்­தின் செய­லா­ளர் ந.சிறீ­காந்­தா­வால் வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருக்­குக் கடி­தம் ஒன்று அனுப்­பப்­பட்­டது. அதில், எமது கட்­சி­யைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி வடக்கு மாகாண சபை­யில் தங்­கள் தலை­மை­யில் அமைந்­துள்ள அமைச்­ச­ர­வை­யில் தொடர்ந்தும் அங்­கம் வகிப்­ப­தற்­கான சகல தகு­தி­க­ளை­யும் பா.டெனீஸ்­வ­ரன் இழந்­துள்­ளார் என கட்சி தீர்­மா­னித்­துள்ளது.

பா.டெனீஸ்­வ­ரனை அமைச்­ச­ர­வை­யில் இருந்து நீக்க உரிய நட­வ­டிக்கை எடுக்­கு­மா­றும் அவ­ருக்­குப் பதி­லாக எமது கட்­சி­யி­னால் பரிந்­து­ரைக்­கப்­ப­டும் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னரை அமைச்­ச­ராக நிய­மிக்­கு­மாறு தங்­க­ளைக் கோரு­வ­தற்­கும் கட்சி மேலும் தீர்­மா­னித்­துள்­ளது. டெனீஸ்­வ­ரனை அமைச்­ச­ர­வை­யில் இருந்து நீக்­கும் நட­வ­டிக்­கையை முன்­னெ­டுக்­கு­மாறு வேண்­டிக் கொள்­கின்­றேன். தங்­கள் அமைச்­ச­ர­வைக்­கான எமது கட்­சி­யின் பிர­தி­நி­தி­யின் பெயரை உரிய நேரத்­தில் அறி­யத்­த­ரு­வோம் – என்று குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. இதற்கு அன்­றைய தினமே, வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் பதில் கடி­தம் எழு­தி­யுள்­ளார்.

அதில், உங்­கள் கடி­தம் கிடைத்­தது. அதன் உள்­ள­டக்­கங்­கள் கவ­னத்­தில் எடுக்­கப்­பட்­டன. ஏற்­க­னவே அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரன் எமது விசா­ர­ணைக்­குழு முன் தான் தெரி­ப­ட­மாட்­டார் என்று பகி­ரங்­க­மா­கக் கூறி­யதை முன்­வைத்­தும் வேறு கார­ணங்­க­ளுக்­கா­க­வும் அவர் மீது நட­வ­டிக்கை எடுக்­கத் தீர்­மா­னித்­தி­ருந்­தேன். எனவே உங்­கள் பரிந்­து­ரை­க­ளும் கவ­னத்­தில் எடுக்­கப்­பட்டு உரிய நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­டு­வன என்­ப­தைத் தங்­க­ளுக்­குத் தெரி­யப்­ப­டுத்­து­கின்­றேன் – என்­றுள்­ளது.